No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஜாதகப்படி... இந்த வீட்டில் புதன் இருந்தால்... என்னென்ன பலன்கள் தெரியுமா?

Feb 04, 2020   Malini   333    ஆன்மிகம் 

🌟 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று சொல்வார்கள். அதாவது, இந்த இடத்தில் 'பொன்" என்பது செல்வத்திற்கான அதிபதி குருவை குறிக்கும். ஜாதகத்தில் குருவின் பலத்தைவிட, புதனின் பலம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

🌟 கல்வி, கலை, வித்தைகளுக்கு அதிபதி புதன் கிரகம். எந்தவொரு விஷயத்தையும் கண்ணால் பார்த்தவுடன், அதை கையால் செய்வதற்கு புதனின் அனுக்கிரகம் வேண்டும்.

🌟 ஜோதிடத்தில் நான்காவது கோளாய் கருதப்படும் புதனுக்கு அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை போன்ற தமிழ் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

🌟 லக்னத்தில் 6-ம் இடத்தில் புதன் அமர்ந்தால் அந்த ஜாதகக்காரர் மாமன் வழியில் மிகவும் பிரபலமாக இருப்பார்.


6ல் புதன் இருந்தால் என்ன பலன்?

👉 புத்திசாலியான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

👉 தனது விருப்பம்போல் செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 மாமனின் உதவி கிடைக்கும்.

👉 குறை காண்பதில் வல்லவர்கள்.

👉 புகழ்ச்சியை விரும்பக்கூடியவர்கள்.

👉 ஆடம்பர செலவு செய்யக்கூடியவர்கள்.

👉 ஆசைகள் அதிகம் உடையவர்கள்.

👉 கடனால் பிரச்சனைகள் ஏற்படும்.

👉 நரம்பு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

👉 எதிர்ப்புகளை பேச்சிலேயே வெற்றிகொள்ளக்கூடியவர்கள்.

👉 பிரச்சனைகளை தானே தேடிக்கொள்ளக்கூடியவர்கள்.

👉 வயிறு தொடர்பான பிரச்சனைகளை உடையவர்கள்.

👉 எதையும் ஆராய்ந்து செயல்படாதவர்கள்.



Share this valuable content with your friends