No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துப்படி வடமேற்கு பகுதியில் வரக்கூடாத அமைப்புகள்...!!

Jan 14, 2020   Malini   666    வாஸ்து 

🏠பணமும், புகழும் கோடி கோடியாக இருந்தாலும் ஒரு வீட்டில் உள்ள பெண்கள் சரியாக இருந்தால்தான் அந்த வீடும் நிம்மதியாக இருக்கும்.

🏠வடமேற்கு திசை மிக பலமாக இருந்தால் இதைப்போல் நன்மையளிக்கும் திசை வேறு ஒன்றுமில்லை. அதுவே தவறான அமைப்பாக இருந்தால் தீமையாக முடியும் வாய்ப்புகள் அதிகம்.

🏠வீட்டில் வடமேற்கு சரி இல்லையென்றால் அந்த வீட்டுப் பெண்களுக்கு நல்ல குணமும், மனமும் இல்லாமல் அனைத்தையும் தவறாக புரிந்து கொண்டு அவர்களும் நிம்மதியாக வாழமாட்டார்கள், சுற்றியுள்ளவர்களையும் வாழ விடமாட்டார்கள்.

🏠வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதி சரியாக அமைந்துவிட்டால் அந்த வீட்டில் வசிக்கும் ஆணின் வளர்ச்சி மிக அசுர வேகத்தில் இருக்கும். மிகச் சாதாரணமாக இருந்த அந்த ஆண் ஒரு குறிப்பிட்ட காலத்தில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியும், சுப யோகங்களும் பெற்று மிகச் சிறப்பான வாழ்க்கை வாழ்வார். உதாரணமாக, வடகிழக்கில் கீழ்நிலை தண்ணீர் தொட்டியை அல்லது போர் அமைப்பது, வடமேற்கில் கேண்டிலீவர் முறையில் படி அமைப்பது என்பது சிறந்த அம்சமாகும்.

🏠வீட்டின் வடமேற்கு பகுதி சரிவர அமையப்பெற்றால் ஒரு நல்ல வாஸ்து பலம் பொருந்திய அமைப்பில் சந்தோஷமாக குடியிருப்பார்கள். இல்லையெனில் வீடு கட்டும்போதே வேலை பாதியில் நிற்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஹோட்டல், மருத்துவம், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம், டைலர், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில், ஏஜென்சி நடத்துபவர் போன்றவர்கள் மேன்மை அடைவார்கள்.

வடமேற்கு பகுதியில் வரக்கூடாத அமைப்புகள் :

🏠மேல்நிலை தொட்டி

🏠போர்

🏠உள் மூலை படிக்கட்டு

🏠லிப்ட் போன்றவை அமைக்கக்கூடாது.

🏠மேற்கில் அதிக காலியிடம் இருந்தால் ஆண்கள் என்னதான் தன் கடமையை சரிவர செய்தாலும் அந்த வீட்டில் ஆண்களுக்கு புகழ் குறைந்து அவமரியாதை ஏற்படும்.

🏠நமக்கு வரும் பாதிப்புகளை தவிர்க்க சரியான அமைப்பில் நம் வீட்டை அமைப்பது நமக்கு நல்லது எனலாம்.



Share this valuable content with your friends