No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




6-ல் இந்த கிரகம் இருந்தால்... சுகபோகமாக வாழ்வார்கள்...!!

Jan 13, 2020   Malini   323    ஆன்மிகம் 

🌟 சந்திரன் ஒரு பெண் ராசியாகும். சந்திரன், ஒரு ராசியைக் கடக்க 2 1/4 நாட்கள் ஆகும். சந்திரனுக்கு பகைவீடு இல்லை.

🌟 நிலவு, சோமன், களங்கன், நிசாபதி, பிறை, கலையினன், உடுவின்வேந்தன், கலாநிதி, குபேரன், அலவன், சசி, திங்கள், அம்புலி, நிசாகரன், இமகிரணன், தண்ணவன், குரங்கி, மதி, இராக்கதிர், இந்து, தானவன், அல்லோன், விது, குமுதநண்பன், சுதாகரன், வேந்தன், ஆலோன், முயிலன்கூடு, பசுங்கதிர்த்தே, ரஜனிபதி, சுகுபராக, இந்து, மதி ஆகியவைகள் சந்திரனின் வேறு பெயர்கள் ஆகும்.

🌟 லக்னத்திற்கு 6-ம் இடத்தில் சந்திரன் இருந்தால் சந்திரனுக்குரிய அனைத்து நோய்களும் வரக்கூடும்.

🌟 மேலும், சந்திரன் அசுப பலன் பெற்று இருந்தால் அடுத்தவருக்கு அடங்கி நடக்கக்கூடிய தன்மையை தருவார்.

6ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

👉 சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

👉 மிருதுவான தேகத்தை உடையவர்கள்.

👉 தேவையற்ற எண்ணங்களால் மனவருத்தம் ஏற்படலாம்.

👉 எதிர்ப்புகளை தானே உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

👉 இளம் வயதில் போராட்டத்தை சந்திக்கக்கூடியவர்கள்.

👉 மற்றவருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடியவர்கள்.

👉 எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படக்கூடியவர்கள்.

👉 ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.

👉 ஞாபக மறதி ஏற்படும்.

👉 எதையும் நிதானமாக செய்யும் குணம் கொண்டவர்கள்.

👉 தனம் சார்ந்த செயல்பாடுகளில் மனக்கசப்புகள் உண்டாகும்.



Share this valuable content with your friends