No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இந்த வீட்டில் சந்திரன் இருந்தால்... லாபம் கிடைக்கும்...!!

Jan 13, 2020   Malini   342    ஆன்மிகம் 

🌟 ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் என்ன ராசி? என்று கணிக்கிறோம்.

🌟 சந்திரன் இயற்கை தத்துவப்படி நீருக்கு ஆதாரமாக இருப்பவர். சந்திரனின் ஆட்சி வீடு கடக ராசியாகும். இது ஜலராசி, இதனை கடக ஆழி என்று சொல்வார்கள். உச்சவீடு ரிஷபம், நீச்ச வீடு விருச்சிகம். நீர் இருக்கும் இடமெல்லாம் சந்திரன் ஆதிக்கம் செய்யும் இடங்கள்தான்.

🌟 சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் நன்மை தரும் அமைப்பில் இருந்து, அவரும் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு நன்மைகள் கிடைக்கும். கெடுதல் தரும் அமைப்பில் இருந்தால், நற்பலன்கள் குறையும்.

🌟 லக்னத்திற்கு 7-ம் இடத்தில் சந்திரன் இருந்தால் நன்மை தருபவராக இருப்பார்.

7ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

👉 அன்பான வாழ்க்கைத் துணைவர் அமைவார்.

👉 நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

👉 கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும்.

👉 குழப்பமான மனநிலையை கொண்டவர்கள்.

👉 பொறுமையான குணநலன்களை உடையவர்கள்.

👉 சமூக வாழ்க்கையில் ஈடுபாடு உடையவர்கள்.

👉 அலங்காரத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

👉 தாய்வழி உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள்.

👉 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

👉 குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.



Share this valuable content with your friends