No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சந்திரன் இங்கு நின்றால்... எதிலும் வெற்றி இவர்களுக்கே..!!

Jan 08, 2020   Malini   308    ஆன்மிகம் 

🌟 சந்திரனுக்கும், மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களுக்கு மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார்.

🌟 சுகங்கள், துக்கங்கள், கோபங்கள், தாபங்கள், உடன்பாடுகள், முரண்பாடுகள், ஒட்டுதல்கள், விரிசல்கள், பிடிவாதங்கள், விட்டுக்கொடுத்தல்கள், சுயநலங்கள், தியாகங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைகள், துரோகங்கள், காதல், காமம், மன நெகிழ்ச்சிகள், மன எரிச்சல்கள், புளங்காகிதங்கள், பூசல்கள் போன்றவைகளுக்கு சந்திரன் காரகன்.

🌟 ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகர் அதிகமாக சந்திப்பார். இல்லையென்றால் போராட்டம்தான்.

🌟 வெற்றி கொள்ளும் சந்திரன் லக்னத்தில் 3-ம் இடத்தில் தனித்து நின்றால் அந்த ஜாதக்காரர்களுக்கு பெரும் செல்வம் கிட்டும்.

3ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

👉 வாகன வசதி கிடைக்கும்.

👉 நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

👉 அடிக்கடி குறுகிய பயணங்களை மேற்கொள்வார்கள்.

👉 தேவையற்ற அலைச்சல்களை உடையவர்கள்.

👉 மாறும் பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.

👉 வாழ்க்கை துணைக்கு கட்டுப்படக்கூடியவர்கள்.

👉 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

👉 எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் திறமை கொண்டவர்கள்.

👉 உடல் வலிமையையும், ஆற்றலையும் உடையவர்கள்.

👉 நாஸ்திக எண்ணமும், ஆன்மிக எண்ணமும் மாறி மாறி தோன்றும்.

👉 சில நேரங்களில் அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும்.

👉 சகோதர, சகோதரிகளின் மீது அன்பு கொண்டவர்கள்.



Share this valuable content with your friends