No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கட்டி முடிக்க முடியாமல் பாதியில் நிற்கும் வீட்டிற்கு வாஸ்து காரணமாக இருக்குமா?

Jan 07, 2020   Malini   543    வாஸ்து 

🏠 ஜோதிடம் பார்த்து, நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, வாஸ்து நாள் பார்த்து, எல்லாம் சரியாக பார்த்து தொடங்கிய கட்டிடம் பல காரணங்களால் நிற்பதை நாம் பலர் கண்டிருக்கலாம்.

🏠 அந்த கட்டிடம் வாஸ்து முறைப்படி இல்லாமல் இருக்கலாம். ஏனெனில் கட்டிட பணியில் கட்டும் முறையில் இது மிகப்பெரிய பங்காற்றுகிறது.

🏠 வாஸ்து என்பது பஞ்சபூதங்களை உள்ளடக்கியது. அந்த பஞ்சபூதங்களுக்கு எந்தவிதமான இடையூறுமின்றி சரியான முறையில் கட்டிடங்களையும், அறைகளையும் அமைப்பதுதான் வாஸ்து.

🏠 வீடு கட்ட ஒருவர் சிறந்த வரைபடம் பெற்றாலும், அந்த வீட்டை கட்டுபவர்களின் மனநிலை, அவர்களின் சூழ்நிலைகள், எதை முதலில் செய்ய வேண்டும்? மற்றும் எதை கடைசியில் செய்ய வேண்டும்? என்ற பக்குவம் தெரிந்திருந்தால் மட்டுமே ஒரு சிறந்த கட்டிடத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டி முடிக்க முடியும்.

🏠 உதாரணமாக, வீடு கட்ட தொடங்கும் முன் கட்டுமான பொருட்களை சேமிக்க சிறிய அளவில் ஒரு அறையை நமது மனையிலோ அல்லது பக்கத்திலோ நாம் உருவாக்குவோம். இது அமையும் திசையும், நம் கட்டிட தேவைகளுக்காக ஒரு நிலத்தடி நீர் தொட்டி தேவைப்படும்போது அதற்காக செப்டிக் டேங்க்-ஐ முதலில் கட்டுதல் போன்றவையும் வீடு பாதியில் நிற்பதற்கான சில காரணங்களாக கொள்ளலாம்.

🏠 பணம் இருக்கிறது என்பதால் எல்லோராலும் எல்லா நேரங்களிலும், எல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடியாது. காரணம், ஒரு நகரத்தின் அடையாளமே அந்த நகரில் அமைந்துள்ள உயர்ந்த கட்டிடங்களில் பெரிய கட்டிடங்களை அடையாளமாக காண்பர்.

🏠 ஆனால், இதையெல்லாம் செய்து முடிக்க தலைசிறந்த பொறியாளர்கள் மட்டுமல்லாமல் முதலில் அச்சாணியாகத் திகழ்வது வாஸ்து நிபுணர்.

🏠 உங்களிடத்தில் பணம் இருக்கலாம், கட்டிடம் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் இருக்கலாம், வேலை செய்ய ஆட்களும் தயாராக இருக்கலாம். ஆனால், எங்கு தொடங்குவது? எப்படி தொடங்குவது? என்ற ஐயத்தில் ஆண்டுகள் பல கடந்திருக்கலாம்.

🏠 உங்கள் வீட்டு கட்டிடப்பணி தீர்வு பெற, புதிதாக தங்களுக்கென்று வீடு கட்ட ஒரு சிறந்த அனுபவமிக்க வாஸ்து நிபுணர்கள் தங்களுக்கான தக்க ஆலோசனைகளை வழங்கும்போது தாங்கள் சிறப்பானதொரு வீட்டை அமைத்து கொண்டு நல்லதொரு வாழ்வை வாழலாம்.




Share this valuable content with your friends


Tags

operation south-east இறந்தவர் கனவில் வந்து பணம் தருகிறேன் வைகுண்டத்தை அடைதல் லக்னத்திற்கு 12ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? எதன் அடிப்படையில் வர்ணங்களை பயன்படுத்த வேண்டும்? விநாயகர் சதுர்த்தி அன்று தொழில் தொடங்கலாமா? பூக்களை திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீடு கட்ட... மனையை தேர்வு செய்வதில்... இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கா? seethathan அந்தஸ்தின் அதிபதியான வடமேற்கு மூலையின் சூட்சமங்கள்..!! கந்த சஷ்டி கவசத்தை எல்லா இடங்களிலும் படிக்கலாமா? pazani கண் தெரியாதவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? 10.10.2019 Rasipalan in pdf format!! சூரிய வெளிச்சமும் தேசிக விநாயகம் பிள்ளை ராகுபகவான் இங்கு இருந்தால்... புதுவிதமான அனுபவம் ஏற்படும்...!! எலுமிச்சைப்பழத்தில் விளக்கு மிதுனம்