No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Dec 27, 2019   Ananthi   663    கனவு பலன்கள் 

1. பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறப்பது போல் கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

2. பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த முடிவுகளில் சாதகமற்ற சூழலால் பொருள் இழப்பு நேரிடலாம்.

3. காட்டிற்குள் வழி தெரியாமல் நான் ஓடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. என் குழந்தைக்கு நான் சிகைக்காய் தேய்த்து தலைக்கு குளிக்க வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் யார் எதை சொன்னாலும் ஒருமுறைக்கு, இருமுறை சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

5. ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் சுபச்செய்திகளால் சுப விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

6. புளியமரத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 புளியமரத்தை கனவில் கண்டால் செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

7. உடைந்த கடிகாரம் மீண்டும் ஓடுவது போல் கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் முடிக்காமல் இருந்துவந்த சில செயல்களை மீண்டும் செய்வதற்கான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.



Share this valuable content with your friends