No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரிய கிரகணம்... என்ன செய்யலாம்?... என்ன செய்யக்கூடாது?..

Dec 27, 2019   Ananthi   315    ஆன்மிகம் 

சூரிய கிரகணம்... என்ன செய்யலாம்?... என்ன செய்யக்கூடாது?...

🌞 அமாவாசை நாளில் சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியன், சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வளைய சூரிய கிரகணம் :

🌞 சந்திரன் பூமியில் இருந்து தூரத்தில் இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால், சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைக்காது. சூரிய பரப்பின் உட்பக்கத்திலேயே சந்திரனின் நிழல் விழும். அப்போது சூரியனின் விளிம்பு மட்டும் வெளியே பிரகாசமாக தெரியும். இதைதான் வளைய கிரகணம் அல்லது கங்கண கிரகணம் என்கிறோம்.

சூரிய கிரகணம் அன்று என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

🌞 கிரகணம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே சாப்பிட்டுவிட வேண்டும்.

🌞 உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும்.

🌞 அசைவம் சாப்பிடக்கூடாது.

🌞 கிரகணத்தின்போது நவகிரக துதியை பாராயணம் செய்யலாம். அதுபோலவே சூரிய கிரகணத்திற்கான துதியையும் பாராயணம் செய்யலாம்.

🌞 பின்பு, ஆலய தரிசனம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

🌞 கிரகணம் முடிந்ததும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது நல்லது. ஆலய தரிசனம் மேற்கொண்ட பிறகே உணவு உட்கொள்ள வேண்டும்.

🌞 ஆலயங்கள் அனைத்தும் மூடி இருக்க வேண்டும். கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது.

🌞 கிரகண காலத்தில் உடலில் எண்ணெய் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது.

🌞 கிரகண சமயத்தில் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டும். ஒரு பெண் இந்தச் சமயத்தில் கர்ப்பம் தரித்தால் குறைபாடுள்ள குழந்தை பிறக்க நேரிடும்.

🌞 இதனை ஆராய்ந்துதான் சாஸ்திரங்கள் கிரகண காலத்திற்கென சில நியதிகளை வகுத்துள்ளன. இவற்றில் முக்கியமானவை கர்ப்பிணிப் பெண்களுக்குரியவைதான். கிரகண காலம் முடியும் வரை அறையை விட்டு வெளியே வரக்கூடாது. நகம் வெட்டக்கூடாது.

🌞 கிரகண விமோசன காலத்தில் அதாவது, கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு ஸ்நானம் செய்துவிட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும்.

🌞 சூரிய கிரகண காலத்தில் வீட்டில் இருந்தபடியே இறைவனை துதித்து, இறை பாடல்களை பாராயணம் செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு :

🌞 கர்ப்பிணிப் பெண்கள் சூரிய கிரகணத்தைப் பார்க்கக்கூடாது. கிரகணத்தின்போது உறங்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

🌞 எந்த வேலையும் செய்யாமல் தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🌞 மேலும், கிரகண நேரத்தின்போது வெளியே சென்றால் அவருக்கும், அவர்களுடைய குழந்தைக்கும் பாதிக்கக்கூடியதாக சில கதிர் வீச்சுக்கள் ஏற்படும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு சில ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

🌞 கிரகணத்தின்போது உணவு சாப்பிடக்கூடாது. கிரகணம் முடிந்த பிறகு குளித்து முடித்துவிட்டு கோவிலுக்குச் சென்று விட்டு பிறகு, உணவு சாப்பிடலாம்.



Share this valuable content with your friends


Tags

எண்ணெய் பொருட்களை கனவில் கண்டால் என்ன பலன்? லக்னத்தில் ராகு இருந்தால் செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! நிறைய கிளிகளை கனவில் கண்டால் என்ன பலன்? கன்னி ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? Sunday Horoscope - 01.07.2018 தானியங்களை கனவில் கண்டால் என்ன பலன்? santhirastamam மாற்றங்கள் ஏற்படும் கன்னி பெண்களை கனவில் கண்டால் என்ன பலன்? 9ஆம் இடத்தில் குருவும் இந்த ஆண்டு சனிப்பெயர்சி.! 01.01.2018 Rasipalan in pdf format !! Phātha saṉi parikāraṅkaḷ.! pride மலர்கள் வாங்குவது போல் கனவு 10.02.2023 history vayal உத்திராடம் நட்சத்திரம் உடைய பெண்ணுக்கும் திருமணம் செய்யலாமா? சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்? செவ்வாய்க்கிழமை