No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிவராத்திரி அன்று சிவனை ஏன் இரவில் வழிபடுகிறோம்?

Aug 07, 2018   Ananthi   417    ஆன்மிகம் 

சிவராத்திரி என்பதற்கு சிவனுக்கு உகந்த இரவு என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

புராணக் கதை :

பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் போர் உண்டான போது இருவருக்கும் ஓர் போட்டி வைத்தார் ஈசன். யார் முதலில் தன் திருமுடியையும், பாதத்தையும் பார்க்கிறார்களோ அவர்களே உயர்ந்தவர் என்று ஈசன் கூறினார். அதில் திருவடியை பிரம்மன் பார்த்ததாக பொய் சொன்னதால் ஈசன் கோபமுற்று அண்ணாமலையில் ஜோதி பிழம்பாய் அமர்ந்தார். இவ்வாறு ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்மா, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மண்ணுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

ஐந்து சிவராத்திரி :

🌟 மகா சிவராத்திரி :

மாசி மாதத் தேய்பிறை சதுர்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு வருஷ சிவராத்திரி என்ற பெயரும் உண்டு.

🌟 யோக சிவராத்திரி :

திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல் - இரவு சேர்ந்த அறுபது நாழிகை (24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி ஆகும்.

🌟 நித்திய சிவராத்திரி :

வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை - வளர்பிறைகளின் சதுர்தசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி ஆகும்.

🌟 பட்ச சிவராத்திரி :

தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

🌟 மாத சிவராத்திரி :

மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.



Share this valuable content with your friends