No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண்டாள் ஓர் அறிமுகம் !!

Dec 23, 2019   Ananthi   259    ஆன்மிகம் 

ஆண்டாள் ஓர் அறிமுகம் !!

🙏 ஆண்டாளைப் பற்றி யோசிக்கும்போது அவரை ஒரு அறியாப் பெண்ணாக, நாராயணனையே நினைத்து அவருக்கு வாழ்க்கைப்பட பிடிவாதம் செய்யும் பெண்ணாக மட்டும் நினைக்க இயலவில்லை. அவர் இயற்றிய திருப்பாவை பாடல்களிலுள்ள தேர்ந்த புலமையும், திறமையும் பிரமிக்க வைக்கின்றன. இப்பொழுது திருப்பாவையின் நாயகியான ஆண்டாளை பற்றி பார்ப்போம்.

🙏 குரு பரம்பரைப்படி, ஸ்ரீவில்லிப்புத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்ற ஒரு பக்தர் தினமும் கண்ணனுக்கு நந்தவனத்தில் மலர் பறித்து மாலையாய் தொடுத்து பெருமாளுக்கு சேவை செய்வார். ஒரு நாள் நந்தவனத்தில் துளசி செடிக்கு அருகே ஓர் அழகியப் பெண் குழந்தையைக் கண்டார்.

🙏 ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ரசாயி பெருமாள் அளித்த பாக்கியம் என்று நினைத்து அந்த பெண் குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டார். கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள். அந்த குழந்தைக்கு எல்லா கலைகளும், தமிழ் வேதாந்தம், நல்லொழுக்கம் என்று முறையாக கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தார்.

🙏 சிறு வயதிலிருந்து கண்ணனின் கதைகளையும், அவர் யசோதை தாயிடம் கொண்ட அன்பும், கோபியர்களிடம் செய்த குரும்புதனம்..! என்று கண்ணணை பற்றி கேட்கக் கேட்க அவரின் மீது அளவில்லா காதல் கொண்டு அவரையே மணக்க வேண்டும் என்று, அவரின்பால் கொண்ட அன்பினால் அவரை நினைத்து நினைத்து, அவருடன் ஓடி விளையாடி பேசி மகிழ்வது போல் நினைத்து கற்பனை உலகில் மிதந்தாள்.



Share this valuable content with your friends


Tags

Thursday rasipalan - 09.08.2018 பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (11.02.2020) தினசரி ராசிபலன் (13.12.2021) MADU செவ்வாய் இந்த இடத்தில் இருந்தால்... என்னென்ன பலன்கள் உண்டாகும்? வீட்டின் எந்த பகுதியில் சமையலறை அமைக்கலாம்? எம்.பக்தவத்சலம் முனீஸ்வரரை வழிபாடு செய்யலாமா? பாபா ஆம்தே இயற்கைக்கு மாறான அமைப்புகள் வரும்போது ஏற்படும் விளைவுகள் கரிநாள் அன்று சீர்வரிசை கொடுக்கலாமா? தாலி கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அறுவடை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? paanaasuran சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? அதீத நினைவாற்றலை உடையவர்கள் இவர்களே! வெள்ளி தட்டு அமாவாசை அன்று முதல் பிறந்தநாளை கொண்டாடலாமா? vaishnavi poojai