No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆண்டாள் விரதம்.!

Dec 23, 2019   Ananthi   302    ஆன்மிகம் 

ஆண்டாள் விரதம்..!

🙍 ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அதனால், ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணமாகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும், பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளுக்கு மாலை சாற்றி வழிபட்டாலும், வாரணம் ஆயிரம் பாடி வந்தாலும் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.

🙍 பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும் மகிமை வாய்ந்தது. மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாளை வேண்டி விரதமிருந்து வழிபாடு செய்து வந்தால் திருமணமாகாத கன்னியருக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

🙍 திருமாலை தனது கணவனாக மனதில் எண்ணிக்கொண்டு, அவரையே நினைத்து உருகியவர் ஆண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோவிலில் குடிகொண்டிருக்கும் பெருமாளுக்காக தொடுத்த மலர் மாலைகளை எல்லாம், தானும் அணிந்து அழகு பார்த்து, சூடிக்கொடுத்த சுடர்கொடியாக மாறியவர் ஆண்டாள்.

🙍 உலகத்தை ஆளும் கண்ணனே தனக்கு கணவனாக வரவேண்டும் என்பதற்காக, ஆண்டாள் மேற்கொண்ட நோன்புதான் பாவை நோன்பு. இந்த நோன்பை கடைபிடிப்பதற்காக அதிகாலையில் எழுந்து, தனது தோழியரையும் தன்னுடன் அழைத்துச் சென்று நீராடிவிட்டு வருவார். பின்பு தன்னை கோபிகையாகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், பெருமாள் அமர்ந்த கோவிலை கண்ணனின் வீடாகவும் எண்ணிக்கொண்டு தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.



Share this valuable content with your friends


Tags

சனிப்பெயர்ச்சி thirumuruga nayanar மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 7-ல் ராகு இருந்தால்... என்ன பலன்கள் தெரியுமா? dreams கோபுரத்தில் ஏறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தேனீக்கள் கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? virussakam power pathrayogam மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் கன்றுக்குட்டி உங்கள் ஜாதகப்படி... இங்கு சந்திரன் இருந்தால்... செல்வ சேர்க்கை உண்டாகும்...!! ஊர்வலம் தென்மேற்கில் வரவேற்பறை வருவது. சர்வதேச குழந்தைகள் தினம் தினசரி ராசிபலன்கள் (08.07.2020) தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 12ல் புதன் வீட்டின் மாடியில் தூங்கிய அனைவருக்கும் ஒரே நேரத்தில் பேய் கனவு வந்தால் என்ன பலன்?