No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




4ல் சூரியன், ராகு இருந்தால் என்ன பலன்?

Dec 19, 2019   Ananthi   418    ஜோதிடர் பதில்கள் 

1. காதல் திருமணம் செய்வதற்கு ஜாதகம் அவசியமா? பொருத்தம் இல்லை என்றாலும் வாழ்க்கை சிறப்பாக அமையுமா?

🌟 திருமணம் செய்வதற்கு ஜாதகப்பொருத்தம் பார்ப்பது நன்று.

🌟 பொருத்தம் இல்லை என்றாலும் திருமணம் செய்வது அவரவர் விருப்பமாகும்.

2. பெண்கள் கால் மேல், கால் போட்டு அமருவது சரியா? தவறா?

🌟 பெண்கள் கால் மேல், கால் போட்டு அமருவது சரியானதல்ல.

3. சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் மற்றும் கன்னி லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதிலும் துரிதமாக செயல்படும் குணம் உடையவர்கள்.

🌟 புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

🌟 தன்மானம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. விருச்சிக ராசி, கடக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.

🌟 விளையாட்டுத்தனம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் ரிஷப லக்னம். மூன்றில் சுக்கிரன், புதன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பிறருக்கு உதவும் மனவலிமை கொண்டவர்கள்.

🌟 நுட்பமான கற்பனை வளம் உடையவர்கள்.

🌟 சுகபோக வாழ்க்கையின் மீது மிகுந்த ஈர்ப்பு உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 4ல் சூரியன், ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.

🌟 தேவையற்ற வீண் பேச்சுக்களை விரும்பாதவர்கள்.

🌟 தன்னிடம் இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் ரிஷப லக்னம். 5ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சாமர்த்தியமான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 அறிவுக்கூர்மையும், விஷய ஞானமும் கொண்டவர்கள்.

🌟 எதையும் கூர்ந்து கவனித்து திறம்பட செயலாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



Share this valuable content with your friends