No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேற்கு நடுப்பகுதி அல்லது வடமேற்கு திசையின்... வாஸ்து ரகசியம்...!!

Dec 12, 2019   Malini   288    ஆன்மிகம் 

🏠கழிவு என்றாலே பிரச்சனைதான். அது மனிதனின் உடலில் இருந்தாலும் சரி. நாம் வாழும் வீட்டில் இருந்தாலும் சரி. ஆகையால்தான், நமது முன்னோர்கள் கழிவறையை வீட்டின் வெளிப்புறமாக அமைத்தார்கள்.

🏠ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் குறுகிய இடத்தில் வீடு கட்டும் நிலை இருப்பதால் வீட்டின் உள்ளே கழிவறை மற்றும் குளியலறையை அமைக்க நேர்கிறது. அதனால் வீட்டின் தவறான இடத்தில் கழிவறை அமைந்துவிட்டால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.

🏠ஒரு வீட்டில் கழிவறை மற்றும் குளியலறை மேற்கு நடுப்பகுதி அல்லது வடமேற்கு திசையில் மட்டுமே அமைக்க வேண்டும். அதேபோன்று படுக்கையறையில் கழிவறை சேர்ந்து அமைப்பதாக இருந்தால் அந்த அறையின் வடமேற்கு பகுதியில் அமைப்பது மிக சிறந்தது.

🏠ஒரு வீட்டில் தென்மேற்கு பகுதியில் கழிவறை, குளியலறை அமைந்துவிட்டால் நிச்சயம் அந்த வீட்டின் ஆண்மகனின் தொழில் முடக்கம், பண முடக்கம், மிக இறுக்கமான சூழ்நிலை ஏற்படும். அதேபோன்று அந்த வீட்டில் உள்ள பெண்ணிற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முக்கியமாக வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

🏠மேலும், பல வீடுகளில் தென்கிழக்கில் கழிவறை மற்றும் குளியலறை இருப்பதை நாம் காணலாம். அப்படி அமைத்தால் வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு, மாதவிலக்கு கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கழிவறை மற்றும் கழிவுநீர் தேக்கத்தொட்டி அமைக்கும்போது சரியான அமைப்பில் ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனையின்படி கட்டும்போது சிறப்பானதொரு வாழ்வை வாழலாம்.




Share this valuable content with your friends