No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இன்று... கார்த்திகை துவாதசி... அப்படி என்ன ஸ்பெஷல்?

Dec 10, 2019   Ananthi   336    ஆன்மிகம் 

🌱 கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர். அன்று, மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

🌿 இன்று பிருந்தாவன துவாதசி எனப்படும் துளசிமாடதுவாதசி அனுஷ்டிக்கப்படுகிறது. மகாலட்சுமியின் அம்சம் நிறைந்துள்ள துளசியானது மகாவிஷ்ணுவின் மனைவியாகும். இவளுக்கு, பிருந்தா என மற்றொரு பெயரும் உண்டு.

🌱 பிருந்தா, கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள். பிருந்தாவாகிய துளசிதேவி, மகாவிஷ்ணுவை மணந்து கொண்ட நாள் ஐப்பசி மாத சுக்லபட்ச துவாதசி திதி.

🌿 ஆகவேதான், அன்றைய தினத்துக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர் பெற்றது. எந்த ஒரு பொருளை தானம் செய்யும் போதும், அந்தப் பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின் அளவும், மதிப்பும் கூடுகிறது என்கிறது சாஸ்திரம்.

🌱 மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் இருப்பார். தியானத்தில் இருக்கும் அவரை அன்று உத்தீஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

பூஜை செய்யும் முறை :

🌱 துவாதசி அன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு, காவி இட வேண்டும். தினமும் பூஜை செய்யும் துளசி மாடத்தில் உள்ள துளசிச்செடிக்கு பஞ்சினால் ஆன மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும்.

🌿 கருகமணி நகைகள் அணிவித்து அலங்காரம் செய்து, வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும்

🌱 காலையிலிருந்து உபவாசம் இருந்து, பின் மாலையில் விளக்கேற்றும் நேரத்தில் பூஜை செய்வது சிறப்பானது.

🌿 பூஜை செய்யும் போது, முதலில், முறையாக விநாயகருக்குப் பூஜை செய்து விட்டு, பின் துளசி பூஜை செய்ய வேண்டும்.

🌱 மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றினார் என்பதால் ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து, துளசி மாடத்தில் சொருகிச் சேர்த்து இரண்டிற்கும் பூஜை செய்வார்கள். அப்போது,

அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா இமாம் க்ருஹாண துளஸீம் விவாஹ விதிநேச்வர பயோக்ருதைஸ்ச ஸைவாபி கன்யவத் வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸீம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ என்ற ஸ்லோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்து நாமசங்கீர்த்தனம் செய்வார்கள்.

🌱 பூஜையின் நிறைவில், ஆரத்தியில் தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. சிலர் மாவிளக்கு ஆரத்தியும் செய்கிறார்கள்.

🌿 துளசியின் அடிப்பாகத்தில் சிவபெருமானும், மத்தியில் மகாவிஷ்ணுவும், நுனியில் பிரம்ம தேவரும் வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பன்னிரு ஆதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள், அஷ்டவசுக்கள் மற்றும் அஸ்வினி தேவர்கள் ஆகியோர்களும் துளசியில் வாசம் செய்வதாக ஐதீகம்.

🌱 மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், கணவன் விரும்பிய மனைவியாக வாழவும், வேண்டுவன எல்லாம் பெறவும் இந்தப் பூஜை செய்யப்படுகிறது.

🌿 இதை செய்பவர்களது பாவங்கள் எல்லாம் நீங்கும். எனவே துளசி தேவியைப் போற்றி, பூஜித்து, வெற்றி பெறுவோம்!



Share this valuable content with your friends


Tags

vilaku பிறந்த ஜாதகத்தை வைத்து மரண காலத்தை அறிய இயலுமா? aanmiikam வார ராசிபலன் (08.02.2021 - 14.02.2021) PDF வடிவில் !! திருமணத்தடைக்கு வாஸ்துவும் காரணமா? கைப்பேசி தொலைந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மரம் கருகுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கழறிற்றறிவார் நாயனார் bed room விதவை பாட்டியை கனவில் கண்டால் என்ன பலன்? மீன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? வால்ட் விட்மன் சிவத்தோற்றம் பூஜையறையில் சாமி படங்கள் வடக்கு கிழக்கு முகமாக வருவது மட்டுமே சிறப்பு. 24.05.2020 rasipalan in pdf format quesiton and answer அசுரர்கள் பிப்ரவரி 23 தென்மேற்கு பகுதியில் நாம் காட்ட வேண்டிய மிகுந்த அக்கறை... ஏன்? ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர்