No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் திருமணம் தள்ளிப்போவதற்கு... வாஸ்து காரணமாக இருக்குமா?

Dec 03, 2019   Malini   390    வாஸ்து 

🏠ஒரு வீட்டில் திருமணம் தள்ளிப்போகிறது என்றால், வாஸ்து காரணமாக இருக்கலாம். வாஸ்து திருமண சார்ந்த பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய தீர்வை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

🏠வீட்டில் உள்ள ஆணுக்கு திருமணம் தடைபட்டால் அல்லது தள்ளிப்போனால், அந்த வீட்டில் வடக்கு, வடகிழக்கு சார்ந்த பிரச்சனைகள் இருக்கும். உதாரணமாக, வடகிழக்கில் கழிவறை மற்றும் பூஜையறை இருந்தாலும் அல்லது அந்த பகுதி நீண்டு இருந்தாலும் அது ஆணுக்கு பாதிக்கலாம்.

🏠அதேபோன்று பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகிறது என்றால் அந்த வீட்டில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, தென்கிழக்கில் படுக்கையறை அல்லது கிழக்கில் கழிவறை போன்ற அமைப்புகள் ஏதேனும் இருப்பின் நிச்சயம் பெண்ணுக்கு திருமணம் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.

🏠ஒருவருக்கு ஏன் திருமணம் தள்ளிப்போகிறது? என அவருடைய வீடு அல்லது பூர்வீகம் சார்ந்த சொத்துக்களை நாம் கூர்ந்து கவனித்து பார்க்கும்போது மேற்கண்ட விளக்கங்கள் எளிதில் பொருந்துவதை நாம் அறியலாம்.

🏠பொதுவாக சிலருக்கு விரைவில் திருமணம் கைகூடாமல், தள்ளிக்கொண்டே போவதற்கு பல காரணங்களை கூறுவார்கள். அவற்றுள்,

🏠ஜாதகம் பொருத்தம் இல்லாமல் போகுதல்

🏠திருமணத்தில் விருப்பமின்மை

🏠வேலை கிடைக்காமை

🏠லட்சியம் பூர்த்தி அடையாமை

🏠உடன் பிறந்தவர்களின் தாமத திருமணம் என சொல்லலாம்.

🏠இந்த பிரபஞ்சத்திலேயே மனிதன் வசிக்கக்கூடிய அமைப்பு (அளவான வெப்பம், குளிர், காற்று) பூமிக்கு இருப்பதால்தான் நாம் இங்கு வாழ முடிகிறது. அதுபோல தான் வீடும்.

🏠வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியை கூர்ந்து கவனித்தாலே பாதிப்பிரச்சனை முடிந்துவிடும். இந்த பகுதியில் உள்ள

🏠கிழக்கு ஜன்னல்கள் - சூரிய வெளிச்சம்

🏠வடக்கு ஜன்னல்கள் - காற்றோட்டம்

🏠போன்றவற்றை வீட்டிற்குள் அனுப்பி துடிப்புடன் நம்மை இருக்கச் செய்கிறது. குறிப்பாக கிழக்கிற்கும், தாம்பத்தியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

🏠வீட்டை வாஸ்து முறைப்படி சரிசெய்தாலே போதும் வீட்டில் கெட்டி மேளம் கொட்டும். மேலும் வேலை, லட்சியம் என எல்லாம் எண்ணியபடி நடக்கும்.




Share this valuable content with your friends