No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த நாட்களில் குலதெய்வ கோவிலுக்கு செல்வது நல்லது?

Aug 04, 2018   Arunkumar   754    ஜோதிடர் பதில்கள் 

1. எந்த நாட்களில் குலதெய்வ கோவிலுக்கு செல்வது நல்லது?

🍀 எல்லா நாட்களிலும் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம்.

🍀 குலதெய்வத்தை வழிபட இந்த நாள், அந்த நாள் என்பது இல்லை. எல்லா நாட்களும் சிறப்பான நாட்களாகும்.

2. குரு திசை நடந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

🍀 குருதேவர் ஜென்ம ஜாதகத்தில் பலமாக இருந்தால் செல்வாக்கு உயரும்.

🍀 பண வரவுகள் மேம்படும்.

🍀 பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.

3. இடது கையில் காப்பு அல்லது சாமி கயிறு கட்டலாமா?

🍀 இடது கையில் காப்பு அல்லது சாமி கயிற்றை கட்டுவதை காட்டிலும் வலது கையில் கட்டுவது சிறப்பான பலனைத் தரும்.

4. கும்ப லக்னத்திற்கு, நான்காம் இடத்தில் சுக்கிரன், சந்திரன் மற்றும் செவ்வாய் இணைந்திருந்தால் என்ன பலன்?

🍀 அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.

🍀 தாயாரின் உடல் நலத்தில் பாதிப்புகள் உண்டாகும்.

🍀 பேச்சு வன்மை உடையவர்கள்.

🍀 உலக இன்பங்களை ரசித்து வாழக்கூடியவர்கள்.

5. 10ல் சூரியன், புதன், சுக்கிரன், சனி மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🍀 பேச்சாற்றல் நிறைந்தவர்கள்.

🍀 புதுமை செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

🍀 மனைவி மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🍀 சலிக்காத உழைப்பும், தைரியமும் உடையவர்கள்.

🍀 பிறருடைய தவறுகளை எளிதில் சுட்டிக்காட்ட கூடியவர்கள்.

6. ரிஷப லக்னத்தில் கேது இருந்தால் தீமையா?

🍀 ரிஷப லக்னத்தில் கேது இருந்தால் தீமையன்று.

🍀 பயணங்களின் மீது விருப்பம் உண்டாகும்.

🍀 ஆசைகள் அதிகரிக்கும்.

7. நான் மகர ராசி, மகர லக்னம், லக்னத்தில் சந்திரன், மாந்தி உள்ளது. இதற்கு பலன் என்ன?

🍀 முரட்டு குணம் உடையவர்கள்.

🍀 குறும்புத்தனம் அதிகம் கொண்டவராக இருப்பார்கள்.

🍀 நிலையற்ற மனம் உடையவர்கள்.

🍀 பயந்த சுபாவம் உடையவர்கள்.


Share this valuable content with your friends