No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கார்த்திகை மாத அமாவாசை வழிபாடு...!

Nov 26, 2019   Ananthi   305    ஆன்மிகம் 

🌟 நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிலிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்.

🌟 சிவபெருமான் ஜோதி வடிவில் தோன்றிய தினமான கார்த்திகை மாத பௌர்ணமி எப்படிச் சிறப்பு வாய்ந்ததோ, அதே மாதிரிதான் கார்த்திகை மாத அமாவாசையும் சிறப்பு மிக்கதாகும். இன்று கார்த்திகை மாத அமாவாசை தினமாகும். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடச் சிறந்த நாளாகும்.

🌟 இந்த நாளில், மாலையில் வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துங்கள். குளித்துவிட்டு, நம் முன்னோரின் திருவுருவப் படங்களுக்கு பூக்கள் சார்த்துங்கள். பூஜையறையிலும், வீட்டு வாசலிலும் விளக்கேற்றுங்கள்.

🌟 மேலும், நம் பித்ருக்களுக்கு அதாவது இறந்துவிட்ட நம் தாய், தந்தையருக்குப் பிடித்தமான உணவை நைவேத்தியம் செய்யலாம். அப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து, பித்ருக்களை மனதார வழிபடுவது மிக மிக அவசியம்.

அமாவாசை அன்று வழிபடக்கூடிய தெய்வங்கள் :

🌟 விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி.

🌟 அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக்கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

🌟 சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை தினம் சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

காகத்திற்கு உணவிடுங்கள் :

🌟 காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

🌟 தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக... என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

🌟 முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

🌟 சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்.



Tagged  kaarthikai

Share this valuable content with your friends


Tags

2018-2019 Guru Peyarchi in PDF Format ஜுலை 05 பூஜையறையில் சாமி படங்களை இந்த திசையில் தான் வைக்க வேண்டுமா? சூரியனை கனவில் கண்டால் என்ன பலன்? same child நாய் துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 7ல் குரு தனித்து இருந்தால் திருமண வாழ்க்கையில் கரி நாளன்று துணி எடுக்கலாமா? ஆணுடைய ராசிக்கு 8வதாக இருந்தால் திருமணம் செய்யலாமா? வீட்டிற்கு பால் எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 8ல் சந்திரன் இருந்தால் march 23 பங்குனி கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள் இவர்களே! வெள்ளிக்கிழமையில் முடி வெட்டலாமா? நிறைகுடத்தை கனவில் கண்டால் என்ன பலன்? உங்கள் ஜாதகப்படி... இங்கு ராகு இருந்தால்... தந்திரமாக இருப்பார்கள்...!! பிப்ரவரி மாத ராசிபலன்கள் திருமணத்தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வித்தியாசமான மனிதர்களை கனவில் கண்டால் என்ன பலன்?