No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சோம வார விரதமும்... அதன் பலன்களும்...!!

Nov 25, 2019   Malini   366    ஆன்மிகம் 

🌟சோம வாரம் சிவனுக்கு உகந்த நாள் என்பதால் ஆலயங்களில் சிவனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அதிலும் கார்த்திகை மாத சோம வாரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்பதால் சிவனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த நாட்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். அதன்படி கார்த்திகை மாதங்களில் வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) சிவனுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

🌟108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டுகின்றனர். எனவே திங்கட்கிழமையில் அருகில் இருக்கும் சிவத்தலங்களில் சிவபெருமானையும், உமையாளையும் வணங்கி சோம வார தினத்தில் இறைவனின் அருளை பெறுவோம்.

🌟சிவபெருமான் அபிஷேகப்பிரியர். எம்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட, சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது. சங்காபிஷேகத்தை கண்குளிரக் கண்டு இறைவனை வழிபடுவதால் மலமாசுகள் நீங்கும். சகல செல்வம் மிக்க பெருவாழ்வு கைகூடும்.

🌟கார்த்திகை சோம வார தினத்தில் சிவனையும், விஷ்ணுவையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். கார்த்திகை மாதத்தில் விடியற்காலையிலும், அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

சோம வார விரதம் இருக்கும்போது செய்ய வேண்டியவை :

🌟சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவ தலங்களை தரிசிப்பது நல்லது.

🌟சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது.

🌟சங்காபிஷேகத்தில் பங்கு கொள்வது நல்லது.

🌟சிவனுக்கு பிடித்தமான வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது.

🌟அன்னதான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது நன்று.

சோம வார விரத பலன்கள் :

🌟திருமணம் கைகூடும்.

🌟நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

🌟கணவன், மனைவி ஒற்றுமை கூடும்.

🌟பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

🌟குழந்தை பாக்கியம் கிட்டும்.

🌟ஆயுள் விருத்தி அடையும்.




Share this valuable content with your friends