No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




லட்சுமி தேவி உங்கள் வீட்டில் வாசம் செய்ய வேண்டுமா?

Nov 25, 2019   Malini   322    ஆன்மிகம் 

🌟ஒவ்வொருவரும் தன் வீட்டில் செல்வமும், வளமும் நிறைந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பது வழக்கம். பண வரவும், உடல் ஆரோக்கியமும் அனைத்து பெற லட்சுமி தேவியை வழிபட வேண்டும்.

🌟நமது அன்றாட பழக்க வழக்கங்களைப் பொறுத்தே நமது இல்லங்களில் லட்சுமி தேவி குடிகொள்வது அமைகிறது.

🌟நமது வீட்டில் லட்சுமி தேவி குடிகொள்ள நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

என்ன செய்யலாம்?

🌟தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.

🌟வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது விளக்கேற்றி சாமி கும்பிட வேண்டும்.

🌟வாரத்திற்கு இருமுறையாவது வீட்டையும், பூஜையறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.

🌟பூஜையறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.

🌟வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும்.

🌟பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.

🌟வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

🌟வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது.

என்ன செய்யக்கூடாது?

🌟விளக்கேற்றியப்பின் வீடு பெருக்கக்கூடாது. வீடு பெருக்கும்போது செல்வத்தையும் சேர்த்து பெருக்குவது போலாகும்.

🌟மாலையில் துளசிக்கு நீர் ஊற்றக்கூடாது. இதனால் துரதிர்ஷ்டம் உண்டாகும்.

🌟மாலை சூரியன் மறைந்த பின், தலைமுடியை வாருவதால் உதிரும் முடிகள் தீய சக்திகளை ஈர்ப்பவை. ஆகவே, வீட்டிற்குள் மாலை வேளையில் தலைமுடியை சீவக்கூடாது.

🌟மாலையில் நகம் வெட்டுதல் வீட்டில் நேர்மறை சக்தியை குறைக்கும் சக்தி உண்டு. இது செல்வத்தை குறைக்க வழி செய்யும்.

🌟மாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது.

🌟கோவிலுக்கு கொண்டு செல்லும் எண்ணெயை கோவில் விளக்கிலேதான் ஊற்ற வேண்டுமே தவிர வேறொருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது.

🌟விளக்கேற்றிய பிறகு அடுத்தவர்களுக்கு பால், மோர், உப்பு, அரிசி, சுண்ணாம்பு போன்ற வெள்ளைப் பொருட்கள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. 🌟விளக்கேற்றிய பிறகு துணி துவைக்கக்கூடாது.

🌟தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். எனவே, ஒரு வீட்டில் இருந்து மற்றொரு வீட்டிற்கு தீபத்தை கொண்டு செல்லக்கூடாது.



Share this valuable content with your friends