No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 04, 2018   Ananthi   549    நவ கிரகங்கள் 

👉 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். தன் சொந்த வீட்டில் ஆட்சிப் பலம் பெறுகிறார். அதனால் அவரால் உண்டாகும் சுப மற்றும் மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

🌟 முன்கோபம் கொண்டவராகவும், எவருக்கும் அடிபணியாத குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

🌟 அலட்சிய தன்மையும், முரட்டு சுபாவத்தையும் கொண்டவர்கள்.

🌟 எச்செயலிலும் நிதானம் இன்றி எங்கும் எதிலும் அவசரம் உடையவர்கள்.

🌟 சிந்தித்து செயல்படாததால் இவர்களே இன்னல்களை தேடிக்கொள்வார்கள்.

🌟 கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாதவர்கள்.

🌟 வெற்றி பெறுவதே குறிக்கோளாய் கொண்டு முழு மூச்சாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 பொது நலத்திலும் சுயநலம் உடையவர்கள்.

🌟 தனது கருத்துகளுக்கே முதலிடம் கொடுப்பவர்கள்.

🌟 எதிலும் வித்தியாசமான கண்ணோட்டங்களை கொண்டவர்கள்.

🌟 அடிதடி, விதண்டாவாதத்தில் விருப்பம் உடையவர்கள்.

🌟 தனது கருத்து தவறானாலும் அதை சரி என வாக்குவாதம் செய்யக்கூடியவர்கள்.

🌟 விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள்.

🌟 எங்கும் ஒரே மாதிரியாக இருப்பவர்கள். மற்றவர்களை பற்றி சிந்திக்காதவர்கள்.

🌟 யாருக்கும் பயப்படாதவர்கள். எதையும் நேரடியாக சந்திக்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் முன்னோடியாக வசிக்க வேண்டும் என எண்ணுபவர்கள்.


Share this valuable content with your friends