No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புது வீடு கட்ட இருக்கிறீர்களா? - உங்களுக்கான சில வாஸ்து தகவல்கள்..!!

Nov 14, 2019   Malini   429    வாஸ்து 

🏠ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சொந்த வீடு கட்டுவது என்பது வாழ்நாள் கனவாக, லட்சியமாக இருக்கிறது. அவ்வாறு கட்டும் வீடு நல்ல வாஸ்து அமைப்பில் இருக்கும்போது அந்த வீடு, வீட்டில் உள்ளவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற அழைத்துச் செல்லும். வாஸ்து அமைப்பு சரியில்லாதபோது அவர்களை பல பாதிப்புகளுக்கு உட்படுத்தும்.

வீடு கட்டுவதற்கு முன்பாக கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளும்போது சிறப்பானதொரு வாஸ்து அமைப்பில் வீடு அமையும் :

🏠மனை சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல்

🏠மனைக்கு நல்ல தெருக்குத்து, தெருத்தாக்கம் இருத்தல்

🏠வடகிழக்கு தாழ்வு - குளம், கிணறு, நீர்த்தொட்டி, ஆழ்துளைக்கிணறு

🏠தென்மேற்கு உயரம் - மலை, செல்பேசி கோபுரம், மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி

🏠வடமேற்கில் கழிவுநீர் தொட்டி, கழிவறை

🏠தென்கிழக்கில் சமையலறை

🏠தென்மேற்கில் படுக்கையறை

🏠வீட்டின் வாசல்கள் உச்சப்பகுதியில் வருதல்

🏠வடக்கிலும், கிழக்கிலும் அதிக காலியிடம்

🏠தென்கிழக்கில் பூஜையறை

🏠வீட்டின் பிரம்மஸ்தானம் பாதிப்பில்லாமல் இருத்தல்

🏠வீடு, மனையை பெண்களின் பெயரில் பதிவு செய்தல்

🏠வீட்டின் கட்டிட வரைபடம் வாஸ்து அமைப்பில் இருத்தல்

🏠வடக்கிலும், கிழக்கிலும் சூரிய ஒளி வரும்படி அதிக ஜன்னல் இருத்தல், மேலும் 24 மணி நேரமும் திறந்து இருத்தல்.

🏠வீட்டிற்கு பொது சுவர் இல்லாமலும், சுற்று சுவருடன் இருக்குமாறு அமைத்தல்.

🏠வீடு கட்ட துவங்கும் முன் எந்த வேலையை முதலில் தொடங்க வேண்டும் என தீர்மானித்தல்.

🏠நமது எண்ணம், சொல், செயல் ஒருங்கிணைத்தல்

🏠மேற்கண்டவை போல மேலும் சில வாஸ்து சூட்சமங்களையும், சிறந்த வாஸ்து அமைப்புடன் உள்ள வீட்டின் கட்டிட வரைபடமும் தங்களுக்கு வழங்கி, தங்களை சிறப்பானதொரு வாழ்வை வாழ ஒரு அனுபவமிக்க வாஸ்து ஆலோசகர்கள் வழிகாட்டுவார்கள்.




Share this valuable content with your friends