No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சிம்ம ராசியில் சந்திரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Aug 01, 2018   Ananthi   625    நவ கிரகங்கள் 

⭕ சிம்ம இராசியின் அதிபதி சூரியன் ஆவார். சூரியனுடன் சந்திரன் நட்பு என்ற நிலையில் நின்று தனது பலன்களை அளிக்கக்கூடியவர்.

⭕ இவர்கள் தாயின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

⭕ முன் கோபம் உடையவர்கள் மற்றும் கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

⭕ கோபத்தில் என்ன செய்கிறோம் என்பதனை அறியாதவர்கள்.

⭕ அவப்பெயர்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள். அதனை எதிர்த்து போராடக்கூடியவர்கள்.

⭕ இவர்களின் உடல்நிலை சீரற்ற நிலையில் இருக்கும்.ஏனெனில் நெருப்பும், நீரும் இணைவது என்பது முடியாத செயலாகும்.

⭕ வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

⭕ சுகமான நித்திரை உடையவர்கள்.உறக்கத்தில் எழுப்பினால் மிகுந்த கோபம் அடையக்கூடியவர்கள்.

⭕ சுக போக எண்ணங்கள் மற்றும் செயலால் தன்னுடைய உடல் நலத்தை தானே கெடுத்துக் கொள்வார்கள்.

⭕ தாய்மாமன் உறவுகளால்,சாதகமான சூழல் உண்டாகும்.

⭕ செலவாளிகளாக திகழக்கூடியவர்கள்.

⭕ தான, தர்மங்கள் செய்வதில் விருப்பம் உடையவர்கள்.

⭕ பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் அஜீரணக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும்.

⭕ தெய்வ காரியங்களுக்கு தயங்காமல் செலவு செய்யக்கூடியவர்கள்.



Share this valuable content with your friends