No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பட்டாசுகளை எப்படி... எங்கே வெடிக்க வேண்டும்?

Nov 04, 2019   Malini   332    ஆன்மிகம் 

பட்டாசுகளை எப்படி... எங்கே வெடிக்க வேண்டும்?

🎆பட்டாசுகளை கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி கொண்ட மத்தாப்பினை பயன்படுத்துவதே சிறந்தது.

🎆ஒரு பட்டாசை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து பார்த்து அதன்பின் பயன்படுத்த வேண்டும்.

🎆தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

🎆விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்த வெளிகளில் பட்டாசுகளை வெடிப்பது நல்லது.

🎆ஒரு நேரத்தில் ஒரே ஒரு பட்டாசினை மட்டுமே கொளுத்த வேண்டும். வரிசையாக பல பட்டாசுகளை கொளுத்தினால் அது விபத்து ஏற்படக்கூட காரணமாக அமையலாம்.

🎆நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானால், ஒருபோதும் அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் பற்ற வைக்க முயற்சிக்கவோ கூடாது. பத்துநிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசினை நீரினுள் நன்றாக மூழ்க வைத்து செயலிழக்க வைக்க வேண்டும்.

🎆குழந்தைகள் ஒருபோதும் பட்டாசுகளை தனியே வெடிக்க அனுமதிக்கக்கூடாது. பெரியவர்கள் அல்லது பெற்றோர்கள் மேற்பார்வையில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிப்பதே சிறந்தது.

🎆சங்குசக்கரம் போன்ற பட்டாசுகளை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும்.

🎆பட்டாசுகளை வெடித்த பின்பு அதனை ஒரு பக்கெட்டில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். வெடித்த பட்டாசுகளை அப்படியே குப்பைத்தொட்டியில் போடுவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

🎆வாகனங்கள் சாலையில் வரும்போது பட்டாசுகளை கொளுத்தி போடுவதையும் தவிர்க்க வேண்டும்.

🎆பட்டாசுகளை பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது.

🎆பட்டாசு வெடிப்பவர்கள் கண்டிப்பாக கால்களில் செருப்பு அணிந்துகொண்டு வெடிக்க வேண்டும்.




Share this valuable content with your friends