No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தீபாவளி வழிபாடும்.. நாம் செய்ய வேண்டியவைகளும்...!!

Oct 30, 2019   Malini   355    ஆன்மிகம் 

🎇தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தீய எண்ணங்கள் (அகங்காரம், பொறாமை, தலைக்கனம்...) இருக்கும். அந்த தீய எண்ணங்களை அழித்து நல்ல எண்ணங்களை மனதில் ஏற்படுத்த தீபாவளி சிறந்த நாளாக அமைகிறது.

🎇அதிகாலை கங்காஸ்நானம், படபடவென வெடிக்கும் பட்டாசுகள், புத்தாடைகள், நாவில் ஊற வைக்கும் பலகாரங்கள் இவை மட்டுமின்றி செல்வ வளத்தை பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல் தான்.

தீபாவளி வழிபாடுகள் :

👇லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

👇தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக சிறப்பு வாய்ந்தது. குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

👇தீபாவளி நன்னாள் முதற்கொண்டு வறுமையும், பசிப்பிணியும் விலகி நம் இல்லமும், உள்ளமும் மகிழ்வுற அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும்.

👇தீபாவளித் திருநாளில் நரகாசுரனை அழிக்க காரணமான கிருஷ்ணரை கிருஷ்ணா! முகுந்தா! முராரி! என்று சொல்லி வழிபட வேண்டும். வீட்டில் செய்த பண்டங்களை கிருஷ்ணருக்கு நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

👇செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. தீபாவளி அன்று குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேலும், குலதெய்வ கோவிலிற்கு சென்று வாருங்கள்.

👇தீபாவளி நாளில் கேதார கௌரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

👇தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

👇தீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்தல் வேண்டும்.

தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியவை :

👇புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடமும், வீட்டுப் பெரியோர்களிடமும் ஆசீர்வாதம் பெறுதல் சிறந்தது.

👇தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும்.

👇பட்டாசு, புத்தாடை, இனிப்பு கார வகைகள் என்று அன்றைய நாள் முழுக்க மகிழ்ச்சியும், குதூகலமும் இல்லங்களிலும், நம் உள்ளங்களிலும் வழிந்தோடும்.





Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (08.12.2021) மண் அகல் விளக்கு தீபம் snthiran ராகுவும் இருந்தால் என்ன பலன்? மூதறிஞர் இராஜாஜி சகோதரர்களின் பாசத்தை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான தினம் சுபன் திருமலை காண வேண்டி வைகுண்டம் செல்லுதல் !! Saturday rasipalan பனி மழை பெய்தது போல் கனவு விரத பலன்கள் 3ல் செவ்வாய் மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்? ஓடைகளில் நிறைய தண்ணீர் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? aniruththan தேசிய மருத்துவர்கள் தினம் உங்கள் ஜாதகப்படி... சனி இங்கு இருந்தால்... சுறுசுறுப்பாக இருப்பீர்கள்...!! மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்னி ராசியில் குரு இருந்தால் என்ன பலன்? கேதுபகவான் இங்கு இருந்தால்... வெளிநாட்டு யோகத்தை வழங்குவார்..!! 29.10.2020 Rasipalan in PDF Format!! வாணிதாசன்