1. தெற்கு திசையில் தலை வைத்து உறங்கலாமா?
🌟 தெற்கு திசையில் தலை வைத்து உறங்கக்கூடாது.
2. மேஷ ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
🌟 மனைவியின் மீது அன்பும், பாசமும் கொண்டவர்கள்.
🌟 கற்பனை சக்தி மிகுந்தவர்கள்.
🌟 வாதம் புரிவதில் மன்னர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. மிதுன ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?
🌟 நல்ல தொழில் திறமைகளை உடையவர்கள்.
🌟 அழகான, ஆடம்பரமான உடைகளை அணிவதில் விருப்பம் உடையவர்கள்.
🌟 நல்ல நிலையில் உள்ள சுற்றத்தார்களையும், நண்பர்களையும் உடையவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. குரு திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன்?
🌟 உலோகம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
🌟 அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும்.
🌟 தொழில் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
5. கடகத்தில் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 எதிலும் துரிதமான செயல்பாடுகளை உடையவர்கள்.
🌟 மாற்றங்களை விரும்பி செய்யக்கூடியவர்கள்.
🌟 எதிலும் நிதானமின்றி செயல்படக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
6. நான் ரிஷப லக்னம். 11ல் சனி, சூரியன், சந்திரன், ராகு மற்றும் மாந்தி இருந்தால் என்ன பலன்?
🌟 எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர்கள்.
🌟 எதிலும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்.
🌟 நிதானமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
7. திருமணம் நடைபெறும் காலக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா?
🌟 திருமணம் நடைபெறும் காலக்கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.