No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராசிகளும், நவகிரகங்களும் ஓர் பார்வை !!

Jul 31, 2018   Ananthi   480    நவ கிரகங்கள் 

🌟 பிறவிகளிலேயே உயரிய பிறப்பு என்பது மனிதப் பிறப்பாகும். மற்ற உயிர்களை விடவும் அறிவியலிலும், ஞானத்திலும் சிறந்தவர்களான நாம் சிந்திக்காமல், இப்போது கிடைக்கும் சிறு கால மகிழ்ச்சிக்காக நாம் பிறந்த நோக்கினை விடுத்து மற்ற வழிகளில் சென்று எண்ணற்ற பாவச் செயல்களை புரிந்தும், அந்த செயலுக்கு துணை நின்றும் நாம் அறப்பலனை குறைத்து பாவப் பலனை மென்மேலும் உயர்த்துகிறோம்.

🌟 நாம் செய்த தீயச் செயலால் விளையும் வினைகள் யாவும் நம்முடன் முடிவடைந்து விடாமல் நம்முடைய வாரிசுகளுக்கும் அதை கொடுத்து விட்டு செல்கிறோம். இவைகளே நாம் மீண்டும் மீண்டும் பிறக்க காரணமாக அமைகின்றன. இவைகளே நாம் தோஷங்களாக அனுபவிக்கின்றோம்.

🌟 ஜாதகத்தில் காட்டும் தோஷங்கள் மற்றும் சுப கிரகங்களின் பலவீனம் என்பது நாம் செய்த செயல்களின் அடிப்படையிலேயே உருவாகின்றது. ஆகவே, ஒரு ஜாதகம் என்பது ஒரு சிறந்த காலக்கண்ணாடி ஆகும். நாம் செய்த அறம் மற்றும் அறமற்ற செயல்களை எடுத்துக்காட்டுவதாகும். அது மட்டுமின்றி ஜாதகமே சிறந்த சாவி ஆகும். ஏனெனில், எதுவும் தெரியாத எதிர்காலம் எண்ணும் கதவை நன்முறையில் திறந்து நமது வாழ்க்கையை வளமாக்க கூடியதுமாகும்.

🌟 ஜாதகத்தில் இருக்கும் 12 ராசிகளில் அனைத்து கிரகங்களும் பலம் கொண்டவைகளாக இருக்கமாட்டார்கள். அதிபதிகள் சில ராசிகளில் பகை, நட்பு, ஆட்சி மற்றும் உச்சம் என அவர்கள் பலம் பெறுகிறார்கள். அதன் அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அவர்களால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவும் நிகழ்கின்றன.

🌟 ஜாதகத்தில் கிரகங்கள் பலம் பெறுவதும், பலவீனம் அடைந்தும் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் மட்டுமே. நாம் செய்யும் கர்ம பலன்களின் அடிப்படையிலும் நாம் இப்பிறவியில் செய்கின்ற அறச்செயல்களை கொண்டே நம் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

🌟 நம் எதிர்காலத்தை சிறப்படைய வைக்கவும், எல்லா வல்லமைகளையும், யோகங்களையும் நம் கர்ம வினைகளையும் சரிவர அளிக்கும் நவகிரக நாயகர்கள் :

1. சூரியன்
2. சந்திரன்
3. செவ்வாய்
4. புதன்
5. குரு (வியாழன்)
6. வெள்ளி
7. சனி
8. ராகு
9. கேது
🌟 கிரகங்கள் நின்ற இடங்களின் அடிப்படையில் ராசிகள் பனிரெண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த பனிரெண்டு ராசிகள் பின்வருமாறு :

1. மேஷம்
2. ரிஷபம்
3. மிதுனம்
4. கடகம்
5. சிம்மம்
6. கன்னி
7. துலாம்
8. விருச்சகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்
🌟 அதன் அடிப்படையில் பனிரெண்டு ராசிகளில் நவ நாயகர்கள் அமரும் பட்சத்தில் ஏற்படும் பலன்கள் யாவும் இனிவரும் நாட்களில் நாம் விரிவாக காண்போம்.


Share this valuable content with your friends


Tags

யானையை வளர்ப்பது போல் கனவு கண்டால் உலக வேசெக்டொமி தினம் பாதங்கள் அரித்தால் என்ன பலன்? அதிகாரம் மிகுந்த பேச்சுக்கள்... இவர்களிடமே... யாராக இருப்பார்கள்? ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 7ம் வீட்டில் கேது மற்றும் குரு (வக்ரம்) இணைந்திருந்தால் என்ன பலன்? கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் குணநலகள் எப்படி இருக்கும்? 08.01.2020 Rasipalan in pdf format!! பாழடைந்த கோவில் கனவில் வந்தால் என்ன பலன்? அஸ்தங்கம் அடைந்த கிரகம் நன்மை செய்யுமா? குழந்தை விளக்கை தெற்கு திசை நோக்கி ஏற்றலாமா? குடும்ப ஒற்றுமை kanaporutham thaaneyankal லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? கடலில் இருந்து நல்ல பாம்பு வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 19.09.2020 Rasipalan in PDF Format!! finger kuzanthai