No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆரோக்கிய குறைபாடுகள் நீங்க வாஸ்துப்படி என்ன தீர்வு?

Jul 30, 2018   Ananthi   703    வாஸ்து 

வாஸ்து பார்த்து வீடு கட்டியிருந்தாலும் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுகிறதா? அதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றி பார்ப்போம்.

ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கும் வழிகள் :

வீட்டை வாஸ்துப்படி கட்டியிருந்தாலும் பரவாயில்லை, அதில் இங்கு குறிப்பிடும்படியான அமைப்புகளை சரிசெய்து கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.

1. உங்களது வீட்டு அமைப்பில் ர்யடட-ல் கிழக்கு பகுதியில் ஜன்னல் இருந்தால் 24 * 7 நாட்களுக்கும் திறந்தே வைக்க வேண்டும்.

2. சமையலறையில் கிழக்கு பகுதியில் ஜன்னல் இருந்தால் திறந்தே வைக்கவும், அன்றுமுதல் சமையலில் சுவை கூடுவதை உணர முடியும்.

3. கிழக்கு பகுதியில் உயரமான மரங்கள் இருந்தால் அதன் கிளைகளை வெட்டிவிடவும்.

4. கிழக்கு பகுதியில் பந்தல் போன்ற அமைப்பு இருக்குமானால் அதை முழுவதையும் எடுத்து விடவும்.

5. பூச்செடிகள், கொடிகள் உங்களது வீட்டு அமைப்பில் கிழக்கு முழுவதும் படர விட்டிருந்தால் அதை சிறிது காலத்திற்கு வெட்டிவிடுங்கள்.

6. தென்கிழக்கில் வாழைமரம் இருந்தால் அகற்றி விடவும்.

7. தென்கிழக்கில் துணி துவைக்கும் கல் வைத்திருந்தாலும் அகற்றி விடவும்.

8. தென்கிழக்கில் தண்ணீர் தேங்கும் அமைப்புகள் ஏதேனும் இருந்தால் அதை சரிசெய்து தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

9. நான்கு புறமும் காம்பவுண்ட் அவசியம் வேண்டும். அப்போது தான் பக்கத்து வீட்டு அமைப்புகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் முதலில் தடைபடும்.

10. LPG கேஸ்க்காக தென்கிழக்கு பகுதியில் சுவரில் துளையிட்டிருந்தால் அந்த அமைப்பு தவறு. அதை சரி செய்து LPG கேஸ்-ஐ வீட்டினுள் வைக்கவும்.

11. கிழக்கு முகமாக மட்டுமே அமர்ந்து சாப்பிட வேண்டும்.

12. கிழக்கு முகமாக மட்டுமே நின்று சமைக்க வேண்டும்.

13. வடமேற்கில் சமையலறை வருவதும் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

14. உங்களது மொத்த அமைப்பில் சூரிய ஒளி உங்களது வீட்டினுள் வரவில்லை என்றால் டாக்டர் உங்களது வீட்டினுள் வந்து விடுவார், பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் மேற்கூறிய அமைப்புகள் உங்களது வீட்டினுள் இருக்குமானால் சிறிது மாற்றங்களை செய்து பாருங்கள், அவை மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும்.


Share this valuable content with your friends