வீட்டின் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதியில்.. இதெல்லாம் அமைக்கக்கூடாது..!!
Oct 03, 2019 Malini 392 வாஸ்து
🏠பணமும், புகழும் கோடி கோடியாக இருந்தாலும் ஒரு வீட்டில் உள்ள பெண்கள் சரியாக இருந்தால்தான் அந்த வீடும் நிம்மதியாக இருக்கும். என்னதான் தினமும் ஹோட்டலில் விருந்து சாப்பாடு சாப்பிட்டாலும் நம் வீட்டில் ஒரு பெண் அன்பாக இல்லை என்றால் நிம்மதி போய்விடும்.
🏠தென்கிழக்கு மற்றும் வடமேற்கு சரியில்லை என்றால் ஒன்று பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்படுவார்கள் இல்லையென்றால் அந்த வீட்டு பெண்களுக்கு நல்ல குணமும், மனமும் இல்லாமல் அனைத்தையும் தவறாக புரிந்து கொண்டு அவர்களும் நிம்மதியாக வாழமாட்டார்கள். சுற்றியுள்ளவர்களையும் வாழ விடமாட்டார்கள்.
தென்கிழக்கு மற்றும் வடமேற்கு சரிவர அமைந்தால் :
🏠ஒரு நல்ல வாஸ்து பலம் பொருந்திய வீடு எளிதில் கட்டி சந்தோஷமாக குடியிருப்பார்கள். இல்லையெனில் வீடு கட்டும் வேலை பாதியில் நிற்கும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
ஹோட்டல்
மருத்துவம்
EB டிபார்ட்மெண்ட்
ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம்
டைலர்
பிரிண்டிங் பிரஸ்
ரயில்வே
இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்
ஏஜென்சி நடத்துபவர் போன்றவர்கள் மேன்மை அடைவார்கள்.
தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் வரக்கூடாத அமைப்புகள் :
🏠மேல்நிலை தொட்டி அமைக்கக்கூடாது.
🏠போர் போடக்கூடாது.
🏠உள்மூலை படிக்கட்டு வரும் இடத்தில் லிப்ட் அமைக்கக்கூடாது.
🏠தெற்கில் அதிக காலியிடம் இருந்தால் அந்த வீட்டில் பொருளாதார பிரச்சனையும்,பெண்களின் உடல்நலத்தில் பாதிப்பும் ஏற்படும். சொத்து தகராறு இருக்கும்.
🏠மேற்கில் அதிக காலியிடம் இருந்தால் ஆண்கள் என்னதான் தன் கடமையை சரிவர செய்தாலும் அந்த வீட்டில் ஆண்களுக்கு புகழ் குறைந்து அவமரியாதை ஏற்படும்.
🏠தென்கிழக்கில் பெட்ரூம் அமைக்கக்கூடாது.
🏠தென்கிழக்கில் டாய்லெட் மற்றும் கழிவுநீர் தொட்டி அமைக்கக்கூடாது.
🏠தென்கிழக்கு மற்றும் வடமேற்கில் தண்ணீர் சேமிக்க நிலத்தடி தொட்டி அமைக்கக்கூடாது.
🏠மேற்கண்ட அமைப்புகளையும் மேலும் சில மாற்றங்களையும் செய்து நல்லதொரு நலவாழ்வு வாழ்வோமாக..!!