No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகாளய பட்சத்தில் மறந்தும் கூட இதை செய்துவிடாதீர்கள்...!!

Sep 24, 2019   Ananthi   1970    ஆன்மிகம் 

மகாளய பட்ச காலத்தில் செய்ய வேண்டியவை :

🌟மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை முதலானவை ஏற்படும். எனவே குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவுக்கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.

🌟தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாகதான் கொடுக்க வேண்டும். மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசி மாலை அணிவிக்க வேண்டும்.

🌟மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கும்.

🌟தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்ப்பைப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேதுபகவான் மூலம் பலன்களை பெற்றுத்தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பும், ஆசியும் கிடைக்கும்.

🌟பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.

🌟தற்கொலை செய்தவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.

🌟மகாளய பட்சத்தின், (துவாதசி திதி) பனிரெண்டாம் நாளன்று பித்ரு தர்ப்பணத்தை தவறாமல் செய்யவேண்டும். இந்த நாளில், முன்னோர்கள் ஆராதனையை செய்பவர்கள் சொர்ண லாபம் பெறுவார்கள். அதாவது, சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவார்கள்.

🌟ராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருவாலங்காடு, திருவள்ளூர், திருவையாறு காவிரிக்கரை, பவானி கூடுதுறை, திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியம் தரக்கூடியது.

🌟கோயில்கள், திருக்குளங்கள், நதிக்கரை, கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

மகாளய பட்ச காலத்தில் செய்யக்கூடாதவை :

🌟சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர்கள் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும், மற்றவர் வீடுகளிலும் உணவு உண்ணக்கூடாது.

🌟பித்ருக்களுக்காக மகாளயபட்ச காலம், அமாவாசை முதலான நாட்களில் காமம் முதலான உணர்ச்சிகளைத் தூண்டும் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

🌟மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது. அப்படித் திட்டினால், பித்ரு சாபத்துக்கு ஆளாக நேரிடும்.

🌟முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.


Share this valuable content with your friends