No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரு மனையை தேர்வு செய்வதற்கு வாஸ்து அவசியமா?

Sep 12, 2019   Malini   368    வாஸ்து 

🏠'வரும்முன் காப்போம்' என்ற பழமொழிக்கு ஏற்ப மனையை தேர்வு செய்யும்போதே வாஸ்து விதிப்படி செய்துவிட்டால் பின்பு அந்த மனையில் எந்த இடையூறும் இல்லாமல் கட்டுமானப் பணி செவ்வனே நடந்தேறும். பின்பு அந்த கட்டிடத்தில் இழப்பில்லாமல் வெற்றி பெறலாம்.

🏠நமது கனவு இல்லமோ, தொழில் நிறுவனமோ, பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ கட்டிடம் கட்டுவதற்கு முன் மனை வாங்கும்போது வாஸ்து விதிப்படி வாங்கிவிட்டால் பொருட்சேதத்தையும், மன வருத்தத்தையும் தவிர்க்கலாம்.

🏠ஒரு மனை வாங்கும் முன் அதன் திசையை அறிந்து வாங்குவது உத்தமம். மனையை தேர்வு செய்யும் பொழுது அதன் வடிவம் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும். வேறு வடிவில் வாங்கினால் அதனை கட்டிடம் கட்டுவதற்கு முன் சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்துவிட்டு மற்ற இடத்தை உபயோகப்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.

🏠மனைக்கு வடகிழக்கு பகுதி பள்ளமாகவும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் இருக்க வேண்டும். இயற்கையாகவே தென்மேற்கு பகுதியில் குன்றுகளோ, கோவில் கோபுரமோ, தொலைபேசி கோபுரமோ, உயர்ந்த மரங்களோ அமைந்தால் சிறந்தது. வடகிழக்கு பகுதியில் இயற்கையாகவே ஏரி, குளம், பொதுக்கிணறு அமைந்தால் உத்தமம்.

🏠வடகிழக்கு பக்கம் பள்ளமாகவும், தென்மேற்கு பக்கம் உயரமாகவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், வடக்கு பக்கம் உயரமான அமைப்பு, தென்மேற்கு பக்கம் தாழ்வான அமைப்பு பொருந்திய மனை வாங்குவதை 100% தவிர்க்கவும்.

🏠அதுபோல குன்றுகளும், குளங்களும் தவறான திசையில் இருந்தால் அந்த மனையை வாங்கக்கூடாது. ஒரு ஊரே வடகிழக்கில் மலை மற்றும் தென்மேற்கு பள்ளமாக தான் இருக்கிறது. அங்கு மக்கள் இல்லையா? என்று பலர் கேள்வி தொடுப்பார்கள்.

🏠அந்த ஊரில் உள்ளவர்கள் இழப்புடன் வெற்றி பெறுவார்கள். இந்த மாதிரியான தவறான மனையை காண நேர்ந்தால், 'எனக்கு இந்த சமிஷ்சையை காண்பித்தாயே' என கடவுளிடம் நன்றி கூறி வேறு ஒரு நல்ல வாஸ்து அம்சம் பொருந்திய மனையை தேர்வு செய்து அதில் எந்தவித இழப்பும் இல்லாமல் ஆனந்தமாக வாழுங்கள்.

Tagged  land

Share this valuable content with your friends