No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குருபகவானுக்கு உகந்த நிறம் எது?

Sep 09, 2019   Ananthi   312    ஜோதிடர் பதில்கள் 

1. பணப்பெட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்?

🌟 பணப்பெட்டியை வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.

2. சகடை யோகம் என்றால் என்ன?

🌟 குரு நின்ற ராசிக்கு 6, 8 மற்றும் 12வது ராசிகளில் சந்திரன் நின்றால் உண்டாவது சகடை யோகம் ஆகும்.

3. குபேர பொம்மையை எந்த திசையில் பார்த்தவாறு வைக்க வேண்டும்?

🌟 குபேர பொம்மையை தென்மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு திசையில் பார்த்தவாறு வைக்க வேண்டும்.

4. வீட்டின் தெற்கு திசையில் காலி இடம் இருப்பது நல்லதா?

🌟 வீட்டின் தெற்கு திசையில் காலி இடம் இருப்பது நல்லதன்று.

5. 7ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 தனது விருப்பம் போல் செயல்படக்கூடியவர்கள்.

🌟 சண்டைபிடிக்கும் குணம் உடையவர்கள்.

🌟 எதிர்ப்புகளை வெல்லும் ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. குருபகவானுக்கு உகந்த நிறம் எது?

🌟 குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள் நிறமாகும்.

7. சனி திசை, சந்திரன் புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 சந்திரன் பலமாக இருக்கும் பட்சத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

🌟 வாகனச் சேர்க்கை அதிகரிக்கும்.

🌟 தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends