No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைவது ஏன்?

Aug 28, 2019   Ananthi   299    ஆன்மிகம் 

கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம்?

🌟 மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வரும் ஆவணி மாதம் 6ம் தேதி வெள்ளிக்கிழமை (23.08.2019) அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

🌟 வெண்ணை திருடும் கிருஷ்ணரை விரும்பாத பெண்களே கிடையாது. அப்படி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் கண்ணன்.

கண்ணனின் திருப்பாதத்தை வீட்டில் ஏன் கோலமாக வரைகிறோம் தெரியுமா?

🌟 நாரத முனிவர் ஒரு சமயம் ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

🌟 அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப்பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும், ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ண பரமாத்மா.

🌟 நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வொருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் திருவடிக் கோலம் போடுகிறார்கள். கிருஷ்ணர் 8 வகையாக பக்தர்களுக்கு காட்சிதருகிறார்.

🌟 சந்தான கோபால கிருஷ்ணர் : யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

🌟 பால கிருஷ்ணன் : தவழும் கோலம்.

🌟 காளிய கிருஷ்ணன் : காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன்.

🌟 கோவர்த்தனதாரி : கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

🌟 ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்) : வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

🌟 முரளீதரன் : இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன், ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம்.

🌟 மதன கோபால் : அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன்.

🌟 பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

இவ்வாறு 8 வகைகளில் காட்சித்தரும் கிருஷ்ணரின் பாதத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது.

கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைந்து, வழிபட்டு அவரின் அருளைப் பெறுவோம்...!!


Share this valuable content with your friends


Tags

கோவிலில் குங்குமம் பெறுவது போல் கனவு கண்டால் என பலன்? 23.08.2020 rasipalan in pdf format silai பெண்களுக்கு மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்? ரிஷபத்தில் குரு இருந்தால் என்ன பலன்? சந்திர கிரகணம் நடைபெறும் போது கிரிவலம் செல்லலாமா? kanavu palangal வீட்டின் மாடியில் தூங்கிய அனைவருக்கும் ஒரே நேரத்தில் பேய் கனவு வந்தால் என்ன பலன்? கன்னி ராசியில் சனி இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! தனுசு ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் எது? சித்ரா பௌர்ணமி அன்று குழந்தை பிறக்கலாமா? தினசரி ராசிபலன்கள் (15.06.2020) வார ராசிபலன் (29.06.2020 -05.07.2020) PDF வடிவில் santhira kiraganam சூரியன் நீசம் அடைந்தால் என்ன பலன்? கல்லறையில் குழந்தை அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இளநீரை கனவில் கண்டால் என்ன பலன்? ஆண்டாள் ஓர் அறிமுகம் !! ஆற்றில் நிறைய தண்ணீர் போவது போல் கனவு கண்டால் பற்கள் அனைத்தும் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?