No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண்ணுக்கு திருமணம் ஆனவுடன் பிறந்த வீட்டு வாஸ்து பாதிக்குமா?

Aug 28, 2019   Malini   313    வாஸ்து 

🏡பெண்ணுக்கு திருமணம் ஆனவுடன் பிறந்த வீட்டு வாஸ்து பாதிப்பு நிச்சயமாக இருக்கும். ஒரு பெண் திருமணமாகும் முன் எந்த வீட்டில் இருக்கிறாரோ அதே வாஸ்து ஒத்த வீட்டில்தான் வரன் அமையும்.

🏡பிறந்த வீட்டின் பாதிப்பால் கூட குழந்தையின்மை, கணவன்-மனைவி பிரச்சனை, உடல்நலம் பாதிப்பு, கணவருக்கு வேலையின்மை போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

🏡எப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்யும் பொழுது அவர்கள் கொடுக்கும் பொருள் பிள்ளை வீட்டாருக்கு உதவுமோ, அதேபோல் பெண் வீட்டு வாஸ்து தவறுகளும் பாதிக்கும்.

🏡பெண் நன்றாக படித்திருப்பாள், சம்பாத்தியமும் செய்திருப்பாள், திருமணமும் மிகச் சிறப்பாக நடந்தேறி இருக்கும். பின்பு, கணவரின் தீய பழக்கங்கள், வேலை அல்லது தொழில் பாதிப்புகள், குழந்தையின்மை போன்றவை அந்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இந்த சூழலில் திருமணம் செய்த இடம் தான் சரி இல்லை என்று பெண் வீட்டார் நினைப்பார்கள்.

🏡பெண் வீட்டில் தென்கிழக்கு செப்டிக்டேங்க் அல்லது தென்கிழக்கு பாத்ரூம் போன்ற தவறுகளும் மற்றும் நல்ல உச்சவாசல், வடக்கு கிழக்கு திறப்பு உள்ள வீட்டில் வளர்ந்து இருப்பாள். இதை ஒத்த வாஸ்து குறைபாடு உள்ள வரன் தான் அமைந்து இருக்கும். வாஸ்துவின் நல்ல பலத்தால் பல வெற்றிகளும், வாஸ்து தவறுகளால் சில தோல்விகளும் சந்திப்பர்.

🏡பொதுவாக பெண்ணின் பெற்றோர்கள் பல வெற்றிகள் கண்ட என் பெண்ணின் தோல்விக்கு, மாப்பிள்ளையும் அவரின் வீடும் தான் காரணம் எனவும் எண்ணுவர். ஆனால், இருவர் வீடுகளிலும் உள்ள வாஸ்து குறைபாடுகளும், அவர்களின் பாதிப்புக்கு காரணமாக அமைகிறது.

🏡இதன்மூலம் இரு வீட்டாருக்கும் பல மன வேற்றுமைகள் ஏற்பட்டு உறவுகளில் விரிசல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இதனை தவிர்க்க இரு வீட்டாரும் தங்களது வீட்டை வாஸ்து முறைப்படி சரி செய்யும்போது அவர்களது வாழ்க்கையில் இழப்பில்லாமல் வெற்றிகள் மட்டுமே அமையும். மேலும், குடும்ப உறவுகள் சிறந்து நல்லதொரு வாழ்வை பெறலாம். .


Share this valuable content with your friends