1. புதிய வாகனம் வாங்க சிறந்த நாள் எது?
🌟 வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் வாகனம் வாங்குவது வாகன விருத்தியை கொடுக்கும்.
🌟 அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் வாகனம் வாங்கலாம்.
🌟 சஷ்டி, பௌர்ணமி, ஏகாதசி போன்ற திதிகளில் வாகனம் வாங்குவது சிறப்பு.
2. தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
🌟 தம்பதிகளின் ஒற்றுமைக்கு உதாரணமாக திகழும் அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வருவதன் மூலம் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
3. குளிகையில் திருமணம் செய்யலாமா?
🌟 குளிகையில் சுபகாரியங்கள் செய்யலாம்.
🌟 குளிகையில் செய்யும் சுபகாரியங்களால் அவர்கள் வீட்டில் மீண்டும் சுபகாரியங்களை ஏற்படுத்தும்.
🌟 குளிகையில் அசுப காரியங்களை செய்யக்கூடாது.
🌟 குளிகை காலங்களில் சவ அடக்கம் செய்யக்கூடாது.
4. எந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது?
🌟 ஜென்ம நட்சத்திரத்தன்று முடி திருத்தம் செய்யக்கூடாது.
🌟 பிறந்த நாட்களில் முடி திருத்தம் செய்யக்கூடாது.
🌟 வெள்ளி, செவ்வாய் அன்று முடி திருத்தம் செய்யக்கூடாது.
5. குழந்தை மாலை சுற்றி பிறந்தால் என்ன செய்வது?
🌟 மாலை சுற்றி குழந்தை பிறந்தால் தாய்மாமனுக்கு ஆகாது.
🌟 தாய்மாமன் குழந்தையை முதன்முதலில் நல்லெண்ணெயில் பார்த்த பின்பே நேரடியாக பார்க்க வேண்டும்.
6. அரசு வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
🌟 ஞாயிற்றுக்கிழமையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சூரியனை வணங்கி வந்தால் அரசு வேலை கிடைக்கும்.
7. துளசி மாடத்தை எங்கு வைப்பது?
🌟 துளசி மாடம் வடகிழக்கு மூலையில் இருப்பது சிறப்பு.
🌟 துளசி மாடத்திற்கு தினமும் மாலையில் விளக்கு ஏற்றுவது சிறப்பு.