1. யானை மிதிப்பது போல கனவு கண்டால் என்ன பலன்?
👉 யானையை கனவில் காண்பது விநாயகரை கண்டதற்கு சமம். எனவே, காரியத் தடைகள் அனைத்தும் விலகும்.
👉 யானை மிதிப்பது என்பது நாம் இதுவரை அனுபவித்த துன்பங்கள் நீங்கி விநாயகரின் அருளால் புதிய வாழ்க்கை அமையப் போகிறது என்பதை குறிப்பதாகும்.
2. நம் முன்னோர்களை கனவில் கண்டால் என்ன பலன்?
👉 நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பதாக கனவு கண்டால் செல்வம் பெருகும்.
👉 இறந்தவர், நம்முடன் பேசுவதாக கனவு கண்டால் ஆயுள் விருத்தி ஏற்படும்.
👉 இறந்த முன்னோர்களிடம் நாம் பேசுவதாக கனவு கண்டால் பிணி ஏற்படுவதைக் குறிக்கும்.
3. துளசி செடி கனவில் வந்தால் என்ன பலன்?
👉 துளசி செடியை கனவில் கண்டால் தன விருத்தி உண்டாகும்.
👉 துளசி, மகாலட்சுமியின் அம்சமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
👉 துளசி செடி கனவில் வந்தால் தொழில் விருத்திக்கான முயற்சிகள் கைகூடும்.
4. பூனை கடிப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?
👉 பூனையை கனவில் காண்பது நன்மையைத் தரும்.
👉 பூனை பயந்து ஓடினால் இதுவரை ஏற்பட்ட துன்பங்கள் மறையும்.
👉 பூனை இறந்து கிடப்பதாக கனவு கண்டால் காரிய சித்தி உண்டாகும்.
👉 பூனை கடிப்பதாக கனவு கண்டால் விரோதிகளால் பாதிக்கப்படுவதைக் குறிக்கும்.
5. இறந்தவர்கள் சாப்பாடு கேட்பது போல் கனவு கண்டால் நல்லதா?
👉 இறந்தவர்கள் சாப்பாடு கேட்பது போல் கனவு காண்பது குடும்பத்தில் எவ்வளவு முயற்சித்தும் மேன்மை இல்லாததைக் குறிக்கிறது.
👉 மேலும், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் இருப்பதைக் குறிக்கிறது.
👉 எனவே, ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குடும்பத்தில் மேன்மைகள் உண்டாகும்.