No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நவகிரகங்களின் பாதிப்பை குறைக்கும் எளிய பரிகாரங்கள் !!

Jul 16, 2019   Ananthi   392    ஆன்மிகம் 

நவகிரகங்களில் அனைத்து கிரகங்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு வாகனம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

சம்பந்தப்பட்ட கிரகத்தின் திசை அல்லது புத்தி ஒருவருக்கு நன்மை தரக்கூடியதாகவும், பாதிப்புகளை குறைக்க கூடியதாகவும் அமைவதற்கு அவற்றின் வாகனங்களை படங்களாகவோ அல்லது சிறிய சிலைகளாகவோ உரிய இடத்தில் வைத்து பராமரித்து வந்தால் நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

சூரிய தசாபுத்தி :

சூரிய தசாபுத்தி நடக்கும் காலமானது ஒருவருக்கு நன்மைகளை தருவதற்கு, வீட்டின் மையப் பகுதியில் மயிலின் படம் அல்லது சிறிய உருவ சிலையை வைக்கலாம்.

சந்திர தசாபுத்தி :

சந்திர தசாபுத்தி நடக்கும் காலகட்டத்தில் நமக்கு நன்மையை தருவதற்காக, வீட்டின் தென்கிழக்கு பகுதியில் முத்து விமானத்தின் படத்தை மாட்டி வைக்கலாம்.

செவ்வாய் தசாபுத்தி :

செவ்வாய் தசாபுத்தியில் பாதிப்புகள் வராமல் தடுக்க, வீட்டின் தெற்கு பகுதியில் அன்னப்பறவையின் படம் அல்லது சிலையை வைக்கலாம்.

புதன் தசாபுத்தி :

புதன் கிரகத்தின் தசாபுத்தியின் போது நன்மைகள் ஏற்பட, வீட்டின் வடகிழக்கு பகுதியில் குதிரையின் படம் அல்லது சிறிய அளவிலான சிலையை வைக்கலாம்.

குரு தசாபுத்தி :

குருவின் தசாபுத்தி காலங்கள் நமக்கு நன்மையை அளிப்பதற்கு, வீட்டின் வடக்கு பகுதியில் யானையின் படம் அல்லது உருவத்தை வைத்து பராமரித்து வரலாம்.

சுக்கிர தசாபுத்தி :

சுக்கிரனின் தசாபுத்தி காலம் நன்மையாக அமைய, வீட்டின் கிழக்கு பக்கம் கருடன் படம் அல்லது சிலையை வைக்கலாம்.

சனி தசாபுத்தி :

சனி கிரகத்தின் தசாபுத்தி காலம் நல்லவிதமாக அமைய, வீட்டின் மேற்கு பக்கத்தில் பறக்கும் நிலையில் உள்ள காகத்தின் படம் அல்லது சிறிய உருவ சிலையை வைக்கலாம்.

ராகு தசாபுத்தி :

ராகு தசாபுத்தி நடக்கும் காலம் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க, வீட்டின் தென்மேற்கு பகுதியில் ஆட்டின் படம் அல்லது சிறிய சிலையை வைக்கலாம்.

கேது தசாபுத்தி :

கேது தசாபுத்தி நடக்கும் சமயத்தில் நன்மைகள் நடக்க, வீட்டின் வடமேற்கு பகுதியில் சிங்கத்தின் படம் அல்லது சிலையை வைக்கலாம்.

இவ்வாறு உருவப்படங்கள் அல்லது சிலைகளை வைத்து அந்தந்த கிரகங்களுக்கு உரிய நாளில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.


Share this valuable content with your friends