No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தேய்பிறை அஷ்டமி!!

Jun 25, 2019   Ananthi   426    ஆன்மிகம் 

🌟 பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.

🌟 சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால், இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகளான அஷ்ட பைரவிகளும் உண்டு.

🌟 தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். செவ்வாய்க்கிழமை தேய்பிறை அஷ்டமி வருவதால் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும்.

🌟 தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும்.

🌟 ஸ்ரீ பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

🌟 தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

🌟 பைரவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றமும் பணியாற்றும் இடங்களில் தொல்லைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியைப் பெறலாம்.

🌟 நம்பிக்கையுடனும், பக்தியுடனும் சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

🌟 இழந்த சொத்தைத் திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

🌟 சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

🌟 திருமணத்தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு, வடை மாலை சார்த்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

🌟 பகை, பயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 அஷ்டமிகளில் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

🌟 செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும்.


Share this valuable content with your friends