No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆஞ்சநேயர் வழிபாடு !!

Jun 24, 2019   Ananthi   454    ஆன்மிகம் 

🌟 அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு

மனாகவும், மகாலட்சுமி சீதாதேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் பாத்திரமேற்றனர். சிவபெருமான் ஆஞ்சநேயராக அவதரித்து சேவை செய்தார். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌟 இணையற்ற ராமபக்தரான அனுமன் பிரம்மச்சரியத்தை முழுமையாகப் பின்பற்றுபவர். ஆற்றல், சீலம், அறிவு, பக்தி, வெற்றி, வீரம், புலனடக்கம் என்று நிகரற்ற

ன்மைகளைக் கொண்டவர். அனுமனிடம் விஷ்ணுவின் குணநலன்களும் உண்டு. அனுமன் தனது பக்தர்களுக்கு புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், போன்றவற்றைத் தருபவர் ஆவார்.

ஆஞ்சநேயர் வழிபாடு :

🌟 வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.

🌟 அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும்.

🌟 தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.

🌟 அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும்.

🌟 அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீPராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.

🌟 அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

🌟 அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.

🌟 திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும்.

🌟 துவங்கிய வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.




Share this valuable content with your friends


Tags

மாங்கல்யம் அவிழ்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? நாள்தோறும் காலையில் வீட்டில் சாமி கும்பிடுவதால் கோவிலுக்கு செல்வதில்லை. இதற்கு பலன்கள் கிடைக்குமா? மே 20 சித்தர்கள் தினம் விதை ஊன்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? paarvathi devi நான் சிலரை காப்பாற்றுவது போல் புரட்டாசி HoMe சிம்ம ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் வடிவங்களும்!! சிவன் கோவில் மற்றும் நந்தி சிலை இடிந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விரலில் துடிப்பு ஏற்பட்டால் என்ன பலன்? நவம்பர் 18 VAASTHU வார ராசிபலன்கள் (06.08.2018 - 12.08.2018) PDF வடிவில்.! 22.03.2019 Rasipalan in pdf format!! புரட்டாசி சனிக்கிழமை ரேவதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? feb history pdf format