No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருமணம் உடனடியாக நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

May 08, 2019   Ananthi   510    ஜோதிடர் பதில்கள் 

< 1. சொந்தத்தில் ஜாதகப்பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?

🌟 சொந்தத்தில் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தால் தவறில்லை.

2. எந்தெந்த நட்சத்திரங்களில் கடன் கொடுக்கக்கூடாது, கொடுத்தால் திரும்ப வராது?

🌟 பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம் மற்றும் பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் கடன் கொடுக்கல் - வாங்கலை தவிர்க்கவும்.

3. பூராட நட்சத்திரத்திற்கான அடைப்பு காலம் எவ்வளவு?

🌟 பூராட நட்சத்திரத்தில் இறந்தால் அடைப்பு காலம் இல்லை.

4. 2ல் சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 கனிவான பேச்சுக்களை உடையவர்கள்.

🌟 செல்வ செழிப்பு கொண்டவர்கள்.

🌟 மன உறுதி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. 4ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?

🌟 கொடை உள்ளம் உடையவர்கள்.

🌟 மனை வசதி உடையவர்கள்.

🌟 தாய்வழி உறவுகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

6. திருமணம் உடனடியாக நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வர திருமணம் தொடர்பான தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

Tagged  parigaram

Share this valuable content with your friends