வானத்திலிருந்து இடியுடன் தங்கம் விழுவதை எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
May 06, 2019 Ananthi 376 கனவு பலன்கள்
1. இறந்துபோன என் அத்தை கனவில் வந்தால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
2. எனது இருசக்கர வாகனத்தின் ஆவணங்களை காவல்துறையினர் சரிபார்த்து அனுப்புவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் காரியங்களின் தன்மைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
3. நானும், எனது மனைவியும் ஒன்று சேர்வது போல் அடிக்கடி கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தம்பதிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போல் கனவு கண்டால் பொருளாதாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
5. ஆழ்துளை கிணற்றில் (போர்வெல்) இருந்து நீர் வெளியே பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் கைக்கூடும் என்பதைக் குறிக்கிறது.
6. வானத்திலிருந்து இடியுடன் தங்கம் விழுவதை எடுத்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செய்யும் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
7. அலுமினியத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌟 அலுமினியத்தை கனவில் கண்டால் சுய முயற்சியால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.