No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நீங்கள் விளக்கேற்றும் திசை சரி என்று நினைக்கிறீர்களா?

Jul 04, 2018   Suganya   677    ஆன்மிகம் 

🌟 ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.

🌟 தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி நல்ல பலன்களை தருகின்றன.

🌟 எட்டு திசைகளில் தீபங்களை ஏற்றுவதனால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

கிழக்கு திசை :

🌟 இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் வாழ்வின் துன்பங்கள் நீங்கும். கிரக தோஷம் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீடு இல்லாதவர்கள் வீடு வாங்குவார்கள்.

மேற்கு திசை :

🌟 இத்திசையில் தீபம் ஏற்றினால் பணத்தால் வந்த பகைமை வளராமல் தீரும். கடன் தொல்லை நீங்கும்.

வடக்கு திசை :

🌟 இத்திசையில் தீபம் ஏற்றினால் நல்ல காரியங்களில் வெற்றி பெறலாம். மாங்கல்யத்தைப் பேணி மதிக்காத பாவம் நீங்கும். திருமணம் கைகூடும்.

தெற்கு திசை :

🌟 வீட்டில் இத்திசை நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. மரண பயம் உண்டாகும். வீட்டில் யாராவது இறந்து விட்டால் வசதி இல்லாதவர்கள் கோவிலில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றி இறந்தவர்களுக்கு நல்ல அனுகிரகத்தைப் பெற்றுத் தரலாம்.

தென்கிழக்கு திசை :

🌟 இத்திசையை நோக்கி தீபம் ஏற்றினால் குழந்தைகளுக்கு புத்திக்கூர்மை உண்டாகும். குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக விளங்குவார்கள். இதற்கு தென்கிழக்கு திசையில் தீபம் ஏற்றி அதன் புகையை குழந்தைக்கு நெற்றியில் இடவேண்டும்.

தென்மேற்கு திசை :

🌟 இத்திசையில் தீபம் ஏற்ற பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வரும் துன்பம், கலகம் ஆகியன நீங்கும். திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

வடகிழக்கு திசை :

🌟 இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் வீட்டின் தலைவர் வாழ்வில் உண்மையான கொடையாளியாக மாறுவார். அவரும் அவர்தம் பிள்ளைகளும் தம்மையும் அறியாமல் தானம் செய்வார்கள்.

வடமேற்கு திசை :

🌟 இத்திசை நோக்கி தீபம் ஏற்றினால் சகோதர, சகோதரி ஒற்றுமை நிலவும். குடும்பச் சண்டைகள் நீங்கும்.


Share this valuable content with your friends


Tags

ஐப்பசி மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா? meti அமாவாசை அன்று அசைவ உணவுகளை சாப்பிடலாமா? 11ல் புதன் மற்றும் 12ல் ராகு இருந்தால் என்ன பலன்? மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? கோபால் கணேஷ் அகர்கர் (13.02.2023 - 19.02.2023 )weekly rasipalan உலக சுற்றுலா தினம் தெரியாத ஒரு மிருகம் துரத்துவது போல் ஓங்காரேஸ்வரர் kiruththigai உலக சமூக நீதி தினம் பெண் பார்க்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? uththiraadam March month rasipalan கடக லக்னக்காரர்கள் எந்த ராசிக்கற்களை அணிய வேண்டும்? கைரேகையை வலது கையில் பார்க்கலாமா? இடது கையில் பார்க்கலாமா? தினசரி ராசிபலன்கள் (31.08.2020) பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? ஆருத்ரா தரிசனமும்..!