No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பெண் சந்ததி இல்லாமல் போக காரணம் - வாஸ்து குறையா?

Jul 02, 2018   Dharani   607    வாஸ்து 

நம் முன்னோர்களும் சரி, நமது கிராமங்களிலும் சரி இன்றைக்கு பழக்கத்தில் உள்ள ஒரு விஷயம் என்றால் அது ஆஸ்திக்கு ஒன்று, ஆசைக்கு ஒன்று என்று கூறுவார்கள். அதாவது சொத்துக்காக ஆண் வாரிசும், ஆசைக்கு பெண் வாரிசும் என்பார்கள். ஆனால், இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் ஆண் வாரிசுகள் மட்டுமே இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. காரணம் நாம் என்ன நினைத்துக்கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நமக்கு பெண் வாரிசுக்கான பாக்கியத்தை இந்த ஜென்மத்தில் கொடுக்கவில்லை என்றும், எங்களுடைய ஜாதகத்தில் பெண் வாரிசுக்கான யோகம் இல்லை என்றும், அவர்களுக்கு அவர்களே கூறிக்கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வாழ பழகிக் கொள்கிறார்கள்.

பெண் வாரிசு இல்லாமல் போவதற்கு அவர்கள் குடியிருக்கும் வீட்டு அமைப்பே காரணம் ஆகும்.

தவறான வீட்டு அமைப்புகள் :

1. தென்கிழக்கு, கிழக்கு பகுதியில் மட்டும் போர்டிகோ அமைப்பு வருவது.

2. வடமேற்கு, வடக்கு பகுதியில் மட்டும் போர்டிகோ அமைப்பு வருவது.

3. வடக்கில் காலியிடம் மிக குறைவாக இருப்பது. தெற்கு பகுதியில் அதிக காலி இடம்.

4. வடகிழக்கு மூடிய அமைப்பு.

5. தென்கிழக்கு உள்வாங்கிய அமைப்பு.

6. வடகிழக்கு சமையலறை.

7. வடகிழக்கில் தரைக்கு மேலும், வீட்டிற்கு மேலும் தண்ணீர் தொட்டி அமைப்பு வருவது.

8. மாடிப்பகுதியில் வடகிழக்கில் ரூம் கட்டிவிட்டு, மற்ற பகுதிகளை காலியாக விடுதல்.

9. தென்கிழக்கில் போர், கிணறு, சம்ப், செப்டிக்டேங், ஓடை, வாய்க்கால் போன்ற அமைப்புகள் வருவது.

10. தென்கிழக்கு, கிழக்கு தெருகுத்து வருவது.

11. தென்கிழக்கு மனையில் வீடு கட்டுதல்.

12. வடக்கு முழுவதும் ஜன்னல் இல்லாமல் வீடுகட்டுவது. வடக்கு சுவர் பக்கத்து வீட்டுடன் ஒட்டிய அமைப்பில் உள்ள வீடுகளில் இருப்பது. இதுபோன்ற அமைப்புகளே பெண் வாரிசுகள் இல்லாமல் போகக் காரணம் ஆகும்.


Share this valuable content with your friends


Tags

என்னுடைய அம்மா மற்றும் தங்கையின் கழுத்தை அறுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்கள் மொட்டை அடிப்பது தவறா? பெண் ஜாதகத்தில் 8-ல் செவ்வாய் உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? ஐயப்பன் சாமி வீட்டிற்குள் வந்து பொருள் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோவில் கும்பாபிஷேகத்தை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? செப்டம்பர் 24 கரிநாளன்று புதிய வேலைக்கு சேரலாமா? சண்டை போடுவது Tuesday Horoscope - 14.08.2018 மல்லிகைப்பூ மாலை today horoscope 19.03.2020 in pdf format வார ராசிபலன் daily rasipalan 06.02.2020 in pdf format வழிபடுதல் எம்.கே.தியாகராஜ பாகவதர் 7ல் செவ்வாய் இருந்தால் திருமணம் காலதாமதம் ஆகுமா? Type or click hereகல்யாண வீட்டில் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Mahara rāsi palaṉkaḷ.! பிரம்ம பிரகாஷ் Horoscope for Thursday - 28.06.2018