No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தலைப்பிள்ளைக்கு தலைப்பிள்ளையை திருமணம் செய்யலாமா?

Mar 22, 2019   Ananthi   1029    ஜோதிடர் பதில்கள் 

1. இராகு காலத்தில் ஏன் நல்ல விஷயங்களை செய்யக்கூடாது?

🌟 இராகு காலம் சுப காலமாக இல்லாததால் நல்ல விஷயங்கள் செய்வதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

2. ரோகிணி நட்சத்திர பெண்ணுக்கு, சித்திரை நட்சத்திர ஆண் மகனை திருமணம் செய்து வைக்கலாமா?

🌟 பாவக ரீதியான பொருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.

3. 11ல் செவ்வாய், கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் தைரியமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 சுகபோகங்களுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. கும்ப ராசி, கும்ப லக்னம், சதயம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எளிதில் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.

🌟 மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.

🌟 சினம் கொள்ளும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. கோவிலுக்கு நேர்ந்துவிடும் ஆடுகள் இறந்தால் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா?

🌟 வயதாகி இறக்கும் பட்சத்தில் எவ்விதமான தவறுகளும் இல்லை.

6. தலைப்பிள்ளைக்கு தலைப்பிள்ளையை திருமணம் செய்யலாமா?

🌟 தலைப்பிள்ளைக்கு தலைப்பிள்ளையை திருமணம் செய்வதை தவிர்க்கவும்.


Share this valuable content with your friends