ஆஞ்சநேயர் கனவில் வந்து உங்களுக்கு துணையாக இருப்பதாக கூறினால் என்ன பலன்?
Mar 16, 2019 Ananthi 12570 கனவு பலன்கள்
1. ஆஞ்சநேயர் கனவில் வந்து உங்களுக்கு துணையாக இருப்பதாக கூறினால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பார்த்த காரியம் தடையின்றி விரைவில் நடைபெறும் என்பதைக் குறிக்கின்றது.
2. அம்மன் சிலையை திருடர்கள் உடைத்து திருடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
3. பச்சையாக அசைவம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 அசைவம் பச்சையாக சாப்பிடுவது போல் கனவு கண்டால் குடும்ப நபர்களின் உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும் என்பதைக் குறிக்கின்றது.
4. ரயிலை தவறவிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 திட்டமிட்ட பயணங்களில் ஏற்படும் சில மாற்றங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
5. வீடு தீப்பற்றி புகை மட்டும் தெரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சில முடிவுகளால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
6. பல் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌟 பல் கொட்டுவது போல் கனவு கண்டால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கப்போவதைக் குறிக்கின்றது.