No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




போர்ட்டிக்கோ... அழகா? ஆபத்தா?

Mar 01, 2019   Ananthi   541    வாஸ்து 

🌟 இன்றைய காலக்கட்டத்தில், மாடி இல்லாத வீடுகளை கூட பார்த்திடலாம். ஆனால், போர்ட்டிக்கோ இல்லாத வீட்டை பார்ப்பது அரிதாகிவிட்டது. சமையலறை, படுக்கும் அறைக்கு அடுத்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துவிட்டது இந்த போர்ட்டிக்கோ.

🌟 சிலர் வாகனங்களை நிறுத்துவதற்காக இதனை அமைக்கின்றனர். ஆனால், பெரும்பாலும் இது வீட்டின் ஏதோ ஒரு மூலையை சிதைத்து விட்டு தான் வடிவம் பெறுகிறது. இது மிகப்பெரிய தவறாகும்.

🌟 வீட்டின் வடகிழக்கு மூலையில் திறப்பு இருக்க வேண்டும் என்று அப்பகுதியை போர்ட்டிக்கோவாக ஆக்கினால் வீட்டின் வடகிழக்கு பகுதி வெட்டுப்படும். இது தலையில்லா உடலுக்கு சமமாகும். தலையில்லாத உடலால் எந்த பயனும் இல்லை. அதற்கான விளைவுகளை அனுபவித்து தான் ஆக வேண்டும்.

🌟 போர்ட்டிக்கோவை, வரவேற்பறை போல பயன்படுத்தும்போதும் தவறுகள் நிகழ்கின்றன. மதில்சுவர் இல்லா வீடுகளில் போர்ட்டிக்கோவின் அடியில் செப்டிக் டேங்க், போர், கீழ்நிலைத்தொட்டி போன்றவை வந்துவிடும். இந்த அமைப்புகள் சரியா என்பதை ஆராய்ந்த பிறகே அமைத்துக்கொள்வது உசிதமான செயலாகும்.

🌟 அப்படி எனில் போர்ட்டிக்கோவை வீட்டில் அமைக்கவே கூடாதா எனில் அமைக்கலாம், வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு எந்த பகுதியும் வெட்டுப்படாமல், வளைவுகள் வரக்கூடாத திசைகளை அறிந்து அமைக்கும்போது, போர்ட்டிக்கோ அழகுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல் சிறப்பான பலன்களையும் வழங்கும்.

போர்ட்டிக்கோ-வில் தவறான அமைப்புகள் :

🌟 பில்லர் அமைப்புடன் கூடிய போர்ட்டிக்கோ

🌟 பிரமிடு அமைப்புடன் கூடிய போர்ட்டிக்கோ

🌟 போர்ட்டிக்கோவின் மேலே அப்படியே அறையாக அமைப்பது

🌟 மதில்சுவரின் மேல் போர்ட்டிக்கோவின் பில்லர் அமைந்து இருப்பது

🌟 இதுபோன்ற தவறுகள் இல்லாத வண்ணம், அழகை மட்டுமே பிரதானமாக கொள்ளாமல் வாஸ்து விதிகளை உணர்ந்து வீட்டை அமைக்கும்போது உன்னதமான வாழ்வை வாழலாம்.


Share this valuable content with your friends