1. கழிப்பு செய்த எலுமிச்சைப்பழம் மீது வண்டி ஏறி உடைந்து, தண்ணீர் தெறித்தால் தீமை வருமா?
🌟 அறியாமல் செய்வதால் எவ்விதமான தீங்கும் நேரிடாது.
🌟 இனி அவ்வாறு நடந்தால், வீட்டினுள் நுழையும்போது கை, கால்களை அலம்பி விட்டு செல்லவும்.
🌟 மேலும், வீட்டில் இருப்பவர்களுக்கு அமாவாசை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றிப் போடவும்.
2. மேஷம் மற்றும் விருச்சக ராசிக்காரர்கள் பவளம் வைத்த மோதிரத்தை எந்த நாளில், எந்த நேரத்தில் அணிய வேண்டும்?
🌟 மேஷம் மற்றும் விருச்சக ராசிக்காரர்கள் பவளம் வைத்த மோதிரத்தை செவ்வாய்க்கிழமைகளில் வரும் செவ்வாய் ஓரையில் அணிவது சிறப்பானதாகும்.
3. கிழக்கு திசையைப் பார்த்து வீடு இருந்தால் நல்லதா?
🌟 கிழக்கு திசையைப் பார்த்த வீடுகள் சுபிட்சத்தை அளிக்கும்.
🌟 மேலும், குடும்ப தலைவரின் லக்னத்திற்கு ஏற்ப வாசலின் திசையை வைப்பது நல்லது.
4. சிம்மராசி பூர நட்சத்திரத்திற்கு உண்டான தொழில் என்ன?
🌟 சுக்கிரன் வலிமையுடையவராக இருப்பின் ஆடை, ஆபரணங்கள் சம்பந்தமான தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும்.
5. அமாவாசையில் பிறந்தால் என்ன பலன்?
🌟 அமாவாசையில் பிறந்தவர்கள் பல திறமைகளை கொண்டவர்கள்.
🌟 அரசாளும் திறமை உடையவர்கள்.
🌟 மூடநம்பிக்கையை வெறுக்கக் கூடியவர்கள்.
🌟 புதுவிதமான ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடியவர்கள்.
6. குலதெய்வத்தை எப்படி கண்டறிவது?
🌟 குலதெய்வம் தெரியாதவர்கள் வீட்டில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, இஷ்ட தெய்வத்தை வேண்டி குலதெய்வம் அறியும் பொருட்டு தீபம் ஏற்றி வரவும்.
🌟 அவ்வாறு தீபம் ஏற்றி வர அதற்கான வழிகளும், கோவிலின் இருப்பிடம் பற்றிய குறிப்புகளும் கூடிய விரைவில் கிடைக்கும்.
7. அஷ்டமி திதியில் இடம் வாங்கலாமா?
🌟 அஷ்டமி திதியை விடுத்து மற்ற சுபமான திதிகளில் இடம் வாங்கலாம்.
8. திருமணமான தம்பதிகள் எப்போது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்?
🌟 திருமணமான தம்பதிகள் ஒரு வாரத்திற்குள் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.