No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

Feb 07, 2019   Ananthi   504    ஆன்மிகம் 

வளம் தரும் சதுர்த்தி விரதம் :

🌟விநாயகர் பிரணவத்தின் வடிவம். இதன் திரிந்த வடிவமே பிள்ளையார் சுழி. பிள்ளையார் சுழியை இட்டாலே ஆணவம் ஒழிந்து இறை உணர்வு உண்டாகும். சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும்.

🌟விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சி தருகிறது. இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை - விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள் - பூத வடிவமாகும். புருவம், கண்கள் - மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் - தேவ வடிவமாகும்.

🌟சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்கு சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொள்ள வேண்டும். ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.

🌟விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுதல் மிகவும் நல்லது.

🌟சதுர்த்தி திதியில் ஜாதகத்தில் திருமண தடை உள்ள பெண்கள் இவ்விரதம் கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.


Share this valuable content with your friends


Tags

மூதாட்டியுடன் உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 10ல் சனி இருந்தால் என்ன பலன்? குக்கரில் இருந்து சோற்றை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சூரிய திசை மகர லக்னம் உடைய ஆண்மகனை திருமணம் செய்யலாமா? இன்று (13.09.2018) தினப்பலன்கள் PDFவடிவில் உலக கடித தினம் உற்சாகமான நாள் எங்கு மாடிபடி அமைப்பு வந்தால் என்ன பலன்? மூன்றாம் பிறை தரிசனம் வராஹி தேவி அரசாங்க வேலை கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு என்னிடம் விவாகரத்து கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாதிப்புகள் ஈசானி மூலையில் தண்ணீர் தொட்டி வைக்கலாமா? இறந்த நண்பனுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?< Friday 05.05.2019 Rasipalan in pdf format!! விட்டுக்கொடுக்கும் குணம் இல்லாதவர்கள் இவர்களே! மேனை தேவி