No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எந்த திசையில் தலைவைத்து படுக்கக்கூடாது?

Feb 05, 2019   Ananthi   565    ஜோதிடர் பதில்கள் 

1. எந்த திசையில் தலைவைத்து படுக்கக்கூடாது?

🌟 வடக்கு மற்றும் தெற்கு திசையில் தலை வைத்து படுக்கக்கூடாது. ஏனெனில் பூமியின் காந்தப்புலமானது செயல்படும் திசைகள் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் ஆகும்.

2. துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம் உடையவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 புதிய தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள்.

🌟 உணவு சம்பந்தமான தொழில்கள்.

🌟 திரவம் சார்ந்த தொழில்கள் செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 8-ல் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 நிலையற்ற கருத்துக்களை உடையவர்கள்.

🌟 செல்வாக்கு கொண்டவர்கள்.

🌟 ஏற்ற, இறக்கமான சூழலுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ரோகிணி நட்சத்திரம் உடைய பெண், உத்திராடம் 3-ம் பாதம் உடைய ஆணை திருமணம் செய்து கொண்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 குலதெய்வ வழிபாடு செய்து வர அனைத்து பிரச்சனைகளும் நீங்கி சுபிட்சம் உண்டாகும்

5. லக்னத்திற்கு 12-ல் (விருச்சகம்) சனி இருந்தால் என்ன பலன்?

🌟 கண்களில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.

🌟 எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 தயக்க குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சனி சுக்கிரனை பார்ப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன?

🌟 விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

🌟 ஆடம்பரப் பொருட்களின் மீது விருப்பம் உடையவர்கள்.

🌟 அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. பூஜை அறையில் கடவுள் படத்தின் அருகில் இறந்தவர்களின் படத்தை வைக்கலாமா?

🌟 பூஜை அறையில் கடவுள் படத்தின் அருகில் இறந்தவர்களின் படத்தை வைக்கக்கூடாது.


Share this valuable content with your friends