No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஒரே வீட்டில் பெண் கொடுத்து, பெண் எடுக்கலாமா? இதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா?

Jan 08, 2019   Ananthi   603    ஜோதிடர் பதில்கள் 

1. நான் கடக லக்னம். லக்னத்திலிருந்து 8ஆம் வீடான ஆட்சி வீட்டில் கும்ப ராசியில், சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் பற்று இல்லாத தன்மை கொண்டவர்கள்.

🌟 எதைப்பற்றியும் கவலைக்கொள்ளமாட்டார்கள்.

🌟 கற்பனைத் திறன் மிகுந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஒரே வீட்டில் பெண் கொடுத்து, பெண் எடுக்கலாமா? இதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா?

🌟 ஜாதகம் சரியாக பொருந்தி வரும் பட்சத்தில் ஒரே வீட்டில் பெண் கொடுத்து, பெண் எடுக்கலாம். இதனால் எவருக்கும் பாதிப்பு இருக்காது.

3. ஏன் ராகு, கேது உள்ள ஜாதகத்தையும், சுத்த ஜாதகத்தையும் இணைக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்?

🌟 ராகு, கேது உள்ள ஜாதகத்தையும், சுத்த ஜாதகத்தையும் இணைத்தால் ஆரம்பத்தில் இனிமையாக இருக்கும் உறவு நாளடைவில் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டே ராகு, கேது உள்ள ஜாதகத்தையும், சுத்த ஜாதகத்தையும் இணைக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது.

4. ஆண் குழந்தைக்கு வெள்ளிக்கிழமையில் தேய்பிறையில் மொட்டை(வேண்டுதல்) அடிக்கலாமா?

🌟 சுபமுகூர்த்த நாளாக இருக்கும் பட்சத்தில் ஆண் குழந்தைக்கு வெள்ளிக்கிழமையில் தேய்பிறையில் மொட்டை(வேண்டுதல்) அடிக்கலாம்.

5. சாலையில் நடந்து செல்லும்போது எதிரில் கோவில் இருந்தால் காலணி அணிந்தவாறே சாமி கும்பிடலாமா?

🌟 சாலையில் நடந்து செல்லும்போது எதிரில் கோவில் இருந்தால் காலணி அணிந்தவாறே சாமி கும்பிடக்கூடாது.


Share this valuable content with your friends