No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்யலாமா?

Jan 02, 2019   Ananthi   2396    ஜோதிடர் பதில்கள் 

1. மார்கழி மாதத்தில் வீடு குடிப்போகலாமா?

🌟 மார்கழி மாதத்தை விடுத்து மற்ற மாதங்களில் புதிய வீட்டிற்கு குடிப்பெயரவும்.

2. இடது காலால் தெரியாமல் பல்லியை மிதித்து விட்டேன். இதற்கு என்ன செய்ய வேண்டும்?

🌟 கவலை கொள்ளாமல் செய்யும் செயல்களை முழு ஈடுபாட்டுடன் செய்யவும்.

3. சந்திராஷ்டமம் அன்று செய்யும் வேலைகள் அதிகரிக்குமா?

🌟 சந்திராஷ்டமம் அன்று மன சோர்வினால் செய்யும் வேலைகள் மற்றும் பொறுப்புகள் அதிகரிப்பது போல் தோன்றும்.

4. ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே திசை நடந்தால், அவர்களுக்கு திருமணம் செய்வதை காட்டிலும் ஒருவருக்கு ஒரு திசை ஆரம்பிக்கும் போது, மற்றொருவருக்கு அதே திசை முடியும் பட்சத்தில் திருமணம் செய்து வைப்பது சிறப்பை அளிக்கும்.


Share this valuable content with your friends